Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 நவம்பர், 2019

வருமான வரி


Image result for வருமான வரி


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வருமான வரி தாக்கலின்  முக்கியத்துவம்:
 வருமான வரி என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறது. இதன் மூலம் தான் ஒரு நாட்டின் அரசாங்கம் செயல்படுவதற்குரிய நிலையான பொருளாதாரம் கிடைக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் அரசாங்கத்திற்கு வருவாய் கிடைக்க, இந்த வரியானது இந்திய வருமான வரி துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

வருமான வரி சட்டம்:
 இந்த வருமான வரித்துறை மூலம் முறையான வரிகளை வசூல் செய்ய தற்போது வருமான வரி பிடித்தம் என்பது வருமான வரி சட்டமாக நடைமுறையில் உள்ளது. இந்த வருமான வரி சட்டமானது 1-04-1962  அன்று இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அந்த சட்டத்தின் மூலம் வருமான வரி கணக்கை சரி பார்த்தல், வருமான வரிகளை முறையாக வசூலித்தல், வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து வரிகளை வசூலிப்பது போன்ற செயல்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உரிய நபர்களால், ஒருவரின் வருவாய் தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஊதியம் வழங்கும் போதே பிடித்தம் செய்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இந்த சட்டப்படி வருமான வரியை பிடித்தம் செய்தவர்கள் அடுத்து வரும் ஏழு நாட்களுக்குள்ளோ அந்த மாதத்தின் இறுதிக்குள்ளோ பிடித்தம் செய்த வரிப் பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வது கூடுமானவரை தடுக்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து கணக்கில் வராத கருப்பு பணங்களை கண்டறிந்து கையகப்படுத்தவும் வருமான வரி சட்டம் உதவுகிறது.

வருமான வரி கணக்கீடு:
 இதன்படி இந்தியாவில் வாழும் குடிமகன்கள் ஒவ்வொருவரின் வருமானத்தில் இருந்தும் மொத்தமாக ஒரு ஆண்டிற்கு வருமான வரி இவ்வளவு என கணக்கிடப்பட்டு, அதனை மாத தவணைகளில் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு  வருகிறது. இதில் அறுபது வயது மற்றும் என்பது வயது பூர்த்தியான மூத்த குடிமக்களுக்கு வருமான வரி செலுத்துவதில் சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நிரந்தர கணக்கு எண் அட்டை:
 இந்த வருமான வரிகளை முறையாக கணக்கீடு(I.T.Return Filing) செய்வதற்கு வசதியாக வருமான வரித்துறை மூலம் ஒரு நிரந்தர கணக்கு எண் (PAN) கொண்ட அட்டை வழங்கப்படுகிறது. இந்த நிரந்தர கணக்கு எண் அட்டையை பெற்று அதனை வங்கி கணக்கில் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனி நபரின் வரவு செலவுகளை கண்காணிப்பது சிரமமின்றி நடைபெறும்.
  
வரி செலுத்துவதன் அவசியம்  மற்றும் பயன்கள்  :
 ஒரு நாட்டின் குடி மகனாக ஒவ்வொரு வரும் வருமான வரி செலுத்த வேண்டியது முக்கிய கடமை ஆகும். இந்த வருமான வரியை நாம் முறையாக செலுத்துவதால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் வித்திடுகிறோம். மேலும் முறையாக நாம் வருமான வரி செலுத்தி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வந்தால் பிற்காலங்களில் நாம் ஒரு கடனுக்காக பொதுத்துறை வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ விண்ணப்பிக்கும் போது, நமது வருமானை வரி தாக்கல் முறைகள் சரிபார்க்கப்பட்டு , நமது வருவாய் எல்லாம் நியாயமான முறையில் நடைபெற்றிருந்தால் அதன் மூலம் கடன் பெறுவது மிக எளிதாக நிறைவேறும்.

வருமான வரி சட்டத்தின் தற்போதய நடைமுறை:
 தற்போதய நிதி ஆண்டின் நடைமுறைப்படி, வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பிற்குள் வருபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை.மேலும் இந்த நிதியாண்டின் சட்டப்படி மருத்துவச் செலவுகள் மற்றும் பயணப்படி போன்றவற்றுக்கான வரி 40000 ரூபாயிலிருந்து 50000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றும் நிரந்தர வாய்ப்பு நிதி  திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் பெறக்கூடிய வட்டியின் வருவாய் 10000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். அனால் இந்த நிதியாண்டு முதல் அது 40000 ரூபாய்க்கும் அதிகமாக வட்டியின் வருவாய் இருந்தால் மட்டுமே அதற்கு வரி பிடித்தம் செய்யப்படும். அது போல வீட்டின்  வாடகை மூலம் ஒரு ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான வருகிறதென்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும். அனால் தற்போது நடப்பு நிதியாண்டில் 2.40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான வந்தால் மட்டுமே வரி செலுத்த வேண்டும். அதுபோல ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடு சொந்தமாக இருந்தால், அதற்கு தேசிய வரி செலுத்த வேண்டும் என்ற விதியை தளர்த்தி இந்த ஆண்டு முதல் இரண்டாவது வீட்டை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தி  வந்தால் வரி செலுத்தத் தேவையில்லை என்றும் சொந்த ஒரு ஊரில் ஒரு வீடும், வேலைக்காகச் சென்ற இடத்தில் ஒரு வீடும் என்று மக வாழ்ந்து வரும் நிலையில் வாடகைக்கு விடாமல் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தி வந்தால், அதற்கு வரி  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக