இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
உடல் எடை அதிகரிப்பது குறித்து பலரும் கவலை கொள்கின்றனர். மாறிவரும்
உணவுப் பழக்கம், பணி நேர மாறுதல் என பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. அதே நேரத்தில்
ஒல்லியான உடலமைப்பே அழகு என்ற பிம்பமும் ஊடகங்கள் வாயிலாக கட்டமைக்கப்படுகிறது. இதனால்
உடல் எடைக் குறைப்பு மையங்கள் என்பது பெரிய வணிகமாக உருவெடுத்துள்ளது.
சென்னை, பெங்களூர், டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் உடல் எடை குறைப்பு மையங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. ஆண்கள், பெண்களுக்கு தனியாக இந்த மையங்கள் செயல்பட்டு கல்லா கட்டுகின்றன.
இந்நிலையில் சென்னை உட்பட பல நகரங்களில் செயல்படும் கலர்ஸ் உடல் எடைகுறைப்பு நிலையங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைத்ராபாத்திலிருந்து வந்துள்ள 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று மாநிலங்களில் உள்ள கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் சேலம், கோவை, வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள கலர்ஸ் அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. உடல் எடை குறைப்பு மற்றும் அழகு மேம்பாடு ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது இந்த கலர்ஸ் நிறுவனம். அண்மையில் கல்கி சாமியார் ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக