இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கொடைக்கானலில்
இருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும், பழனியில் இருந்து ஏறத்தாழ 72கி.மீ தொலைவிலும்,
திண்டுக்கலில் இருந்து ஏறத்தாழ 104கி.மீ தொலைவிலும், பெரிய குளத்திலிருந்து
ஏறத்தாழ 77கி.மீ தொலைவிலும் அமைந்து அனைத்து சுற்றுலாப்பயணிகளின் கவனத்தையும்
ஈர்த்துள்ளது தூண்பாறை.
கொடைக்கானல் அழகிய ஓவியமான மலைவாழிடம். மேற்கு
தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது.
எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன்
இருப்பதால் இதை 'மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும்
கொடைக்கானலுக்கு, கடும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வெயில் காலங்களில்
இங்கு வருவது வழக்கம்.
வருடம்
முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும்.
கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற
சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று.
இங்கே செங்குத்தாக காணப்படும் பாறாங்கல்லை
வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.
இந்த பாறைகள், பார்ப்பவர் கண்களுக்கு
பிரம்மிப்பை ஏற்படுத்தும்.
இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால்
இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம்.
இந்த தூண்களுக்குள் இருக்கும் இடுக்குகள்
மிகவும் ஆழமானது.
எனவே, இது மிகவும் ஆபத்தான இடமாக
கருதப்படுகிறது.
தூண்பாறை தமிழ்நாடு வன இலாக்கா துறையின்
கட்டுப்பாட்டில் உள்ளன.
பல நேரங்களில் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே
இருக்கும்.
கோடை
விடுமுறையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழிக்க, தமிழகம் மட்டுமின்றி உலகின் பல
பகுதிகளில் இருந்தும் இக்காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில்
குவிகின்றனர்.
எப்படி செல்வது?
கொடைக்கானலில்
இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கொடைக்கானலில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
பசுமை
பள்ளத்தாக்கு.
கொடைக்கானல்
ஏரி.
பிரையண்ட்
பூங்கா.
பைசன்
வெல்ஸ்.
பேரிஜம்
ஏரி.
கோக்கர்ஸ்
வாக்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக