இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மக்கள் சிரமப்படாமல் வங்கி சேவைகளைச்
செய்து கொள்ள, அனைத்து பொதுத் துறை வங்கிகளின் வேலை நேரத்தையும் மகாராஷ்டிரா
மாநிலம் முழுக்க மாற்றம் செய்து இருக்கிறார்களாம். இந்த புதிய வேலை நேரம் இன்றில்
இருந்து (நவம்பர் 01, 2019 வெள்ளிக்கிழமை) மகாராஷ்டிரம் முழுக்க அமலுக்கு
வருகிறதாம். ஒவ்வொரு வங்கிக் கிளையும் அது அமைந்து இருக்கும் இடத்தைப் பொறுத்து
தான் இந்த புதிய வேலை நேரத்தை நிர்ணயித்து இருக்கிறார்களாம்.
பொதுவாக வங்கி வேலை நேரம் காலை 10 மணி முதல்
மாலை 5 மணி வரைக்கும் தான் இருக்கிறது. ஆனால் சில வங்கிகள் அல்லது சில வங்கிக்
கிளைகள் தங்களுக்கு தோதான மற்ற சில வேலை நேரங்களைப் பின் பற்றிக் கொண்டு
இருக்கிறார்களாம். இப்போது இந்த சீரற்ற வேலை நேரங்களை எல்லாம் மாற்றி, எல்லா
பொதுத் துறை வங்கிகளுக்கும், புதிய வேலை நேரத்தை அறிவித்து இருக்கிறார்கள்.
குடியிருப்பு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை
4 மணி வரை பொதுத் துறை வங்கிகள் செயல்படும். மாலை 3 மணி வரை மட்டுமே பொதுமக்கள்
வங்கிச் சேவையை பயன்படுத்த முடியும்.
அதே போல வணிகப் பகுதிகளில், பொதுத் துறை
வங்கிகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மக்கள் பயன்பாடு மாலை 5
மணி வரை மட்டுமே.
இந்த இரண்டு பகுதிகளையும் சேராத பொது இடங்களில்
இருக்கும் வங்கிக் கிளைகள், வழக்கம் போல, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
செயல்படும். மக்கள் மாலை 4 மணி வரை வங்கிக் கிளைகளுக்குச் சென்று பயன்படுத்திக்
கொள்ளலாம்.
இந்த மூன்று வேலை நேர திட்டத்தை, இந்தியாவில்
இருக்கும் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் அமல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம்
ஏற்கனவே அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மாநில
வங்கி கமிட்டியை (State Level Bankers' Committee - SLBC) அனைத்து வங்கி தலைமை
அதிகாரிகளிடமும் பேசி, மாநிலம் முழுக்க அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும்,
ஒருங்கிணைந்த வேலை நேரத்தை நிர்ணயிக்குமாறு சொல்லி இருக்கிறார்களாம். அதில்
மகாராஷ்டிரா மாநிலம் தற்போது, முதல் மாநிலமாக தன் வங்கி வேலை நேரத்தை மாற்றி
அமைத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் இனி புதிய வங்கி வேலை நேர
மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக