இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுவாமி
: அருள்மிகு சுப்பிரமணிசுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை (உற்சவர்)
தல வரலாறு :
ஒரு முறை பிரம்மா கயிலாயத்தில் எம்பெருமானைத்
தரிசித்து விட்டு திரும்பும் போது வழியில் முருகப் பெருமானைப் பார்த்தும்,
பார்க்காததுப் போல் சென்றான். இதனால் கோபமுற்ற முருகன் பிரம்மனை அழைத்து நீ யார்?
நீ இருப்பது எந்த இடம்? நீ செய்யும் தொழில் என்ன? உனக்கு எந்த நூல் தெரியும்? சொல்
என்றார். அதற்குப் பிரம்மன் என் பெயர் பிரம்மன். உங்கள் தந்தையார் எனக்கு எல்லாக்
கலைகளையும் கற்றுக்கொடுத்து உலகத்தைப் படைக்கக் கட்டளையிட்டுள்ளார். அப்பணியைச்
செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன் எனக் கூறினார்.
அதற்கு முருகன் நல்லது, எல்லாக் கலைகளையும்
இறைவனிடம் இருந்து தெரிந்து கொண்டாய் அல்லவா? அப்படியானால் இக்கலைகளுக்கு முன்னே
சொல்லப்படும் எழுத்து என்ன? அதன் பொருள் என்ன? என்று கேட்டார். அதற்குப் பிரம்மா,
ஐயனே, அந்த எழுத்தையும் அதன் பொருளையும் யான் அறியேன், என்மீது கருணை செய்ய
வேண்டும் என்றான். இதைக் கேட்ட முருகப்பெருமான் கோபம் கொண்டு 'ஓம்" என்னும்
பிரவணத்தின் பொருள் அறியாத இவனைச் சிறையிலிடுமாறு ஆணைப் பிறப்பித்தார். அதன்பின்பு
சுப்பிரமணியர் பிரம்மாவைப் போன்று ருத்ராட் மாலை, கமண்டலம் கொண்டு படைப்புத்
தொழிலை மேற்கொண்டார்.
தலச் சிறப்பு :
கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இன்றும் இங்கு
நல்ல நிலையில் உள்ளது. அந்த மண்டபம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும்.
ஒருமுறை
இவ்வாலயம் இருக்கும் இடம் தெரியாமல் சென்ற பாம்பன் சுவாமிகளைச் சிறுவனாகச் சென்று
வழிகாட்டி, அழைத்து வந்து தரிசனம் செய்வித்துப் பாடலையும் பெற்றான் இத்தலத்து
முருகன்.
பிராத்தனை :
குழந்தை
வரம் இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து
முருகப்பெருமானை வணங்கினால் குடும்ப பிரச்சனைகள், கடன் தொல்லைகள் தீரும்.
மேலும்
குழந்தைகளுக்கு கல்வி வரம் அருள்வதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம்
செய்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக