>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 18 நவம்பர், 2019

    காணும் இடமெல்லாம் பசுமை... பரளிக்காடு..!

     Image result for காணும் இடமெல்லாம் பசுமை... பரளிக்காடு..!


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    கோவையில் இருந்து ஏறத்தாழ 68கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏறத்தாழ 47கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பசுமையான சுற்றுலா தலம் பரளிக்காடு ஆகும்.

     மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாசுபடாத இயற்கை வளம், காணும் இடமெல்லாம் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுத்தமான தண்ணீர் என பரளிக்காடு பசுமைக்கு நிகராக திகழ்கிறது.

     இங்கு வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே பரிசல் சவாரி செய்யலாம். பயணத்தின்போது உயர்ந்த மலைகளின் எழிலையும், பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியையும், கரையோரத்தில் காட்டு யானை, மான் மற்றும் காட்டெருமைக் கூட்டங்களையும் கண்டு ரசிக்கலாம்.

     பின்னர் ஆற்றை ஒட்டிய பகுதியில், வனத்துறையின் பாதுகாப்புடன் விருப்பமிருந்தால் காட்டுக்குள் மலையேற்றம் செல்லலாம். இந்த மலையேற்றத்தின் போது அடர்ந்த பசுமையான காட்டை ரசித்து பார்க்கலாம். அத்திக்கடவு ஆறானது நம்முடைய மனதை மயக்குகின்றது. மேலும், இந்த ஆற்றில் குளிக்க குளிக்க இதமாக இருக்கும்.

    பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்கு வனத்துறையால் செலவிடப்படுகிறது.
    எப்படி செல்வது?

     பரளிக்காடு செல்வதற்கு அதிக பேருந்து வசதிகள் கிடையாது. கார் மற்றும் வேன்களில் மட்டுமே இப்பகுதிக்கு செல்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படுகின்றன. காரமடை, வெள்ளியாங்காடு சென்றால் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் செல்கின்றன.

    எங்கு தங்குவது?

     கோவை, மேட்டுப்பாளையத்தில் கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    எப்போது செல்வது?

     அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

     இனிமையான பரிசல் பயணம்.

     மலையேற்றம்.

     அத்திக்கடவு அருவிக்குளியல்.

    பில்லூர் அணையின் நீர்தேக்கம்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக