Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 நவம்பர், 2019

உலர் பசுமைமாறா காடுகளில்... கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்...!!

 Image result for உலர் பசுமைமாறா காடுகளில்... கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்...!!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி அமைந்துள்ள கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும்.
 இது நாகப்பட்டினத்தில் இருந்து 65கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 117கி.மீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து 16கி.மீ தொலைவிலும் உள்ளது. இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும்.

சிறப்புகள் :
 இந்தச் சரணாலயத்தில் பல்வேறு விதமான கடல் பறவைகளும் காணப்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக்கான புகலிடமாகவும் இது திகழ்ந்து வருகிறது.

 இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளிமான் போன்ற விலங்குகளையும் காணலாம்.
ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிடப்பட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றித்திரியும் தான்தோன்றிக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய குதிரைகள் இங்கு காணப்படுகின்றன.

 இங்கு 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று காணப்படுகிறது.
 இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன.
 கலைமான், நரி, புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு போன்ற விலங்குகள் உள்ளன.
 இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன.
 பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைக்கோளத்தை சேர்ந்த பறவைகள் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அண்டார்டிக்கா பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன.

எப்படி செல்வது?
 நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?
 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

இதர சுற்றுலாத் தலங்கள் :
 உதயமார்தாண்டம் பறவைகள் சரணாலயம்
 தரங்கம்பாடி
வேளாங்கண்ணி
பூம்புகார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக