Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 நவம்பர், 2019

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோவில் அன்னம்புத்தூர்

 Image result for அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் அன்னம்புத்தூர்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலமும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் பெருமைக்குரிய இத்தலம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அன்னம்புத்தூரில் அமைந்துள்ளது.
  மூலவர் - நிதீஸ்வரர்
 பழமை - 1000 வருடங்களுக்கு முன்
 தல வரலாறு :
 சிவனாரின் அடிமுடியை பிரம்மனும், விஷ்ணுவும் தேடிச் சென்றனர். அப்போது முடி தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னார். அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம்.
 இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்கியதால் இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். ஆகவே, இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

தலபெருமை :
 இத்தலத்து சிவனை வணங்கி வழிபட்டால், பிரம்மனும் நம் தலையெழுத்தைத் திருத்தி எழுதி அருள்வார். இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கப் பெறலாம்.
 குபேரன் கடும் தவத்தால் ஈசனிடமிருந்து எட்டு நிதிகளையும் (பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி) ஒருங்கே பெற்று வணங்கிய திருத்தலங்களில் ஒன்று. எனவே, இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு திருநிதீஸ்வரர் எனத் திருநாமம் வந்தது.

பொது தகவல் :
 1008ஆம் வருடம் தன்னுடைய 23வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ராஜராஜசோழன் திருப்பணிகள் செய்ததையும், புனரமைப்பு செய்ததையும், நிவந்தங்கள் அளித்ததையும் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன என்கின்றனர் இந்தியத் தொல்லியல் துறையினர்.
 ராஜராஜப் பெருவுடையாரின் மெய்கீர்த்தியுடன் துவங்குகிற இந்தக் கல்வெட்டின்படி பார்த்தால், இதுவும் சுமார் 1000 ஆண்டுகளைக் கடந்த ஆலயமாகும். பல்லவர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். இங்கேயுள்ள விநாயகரின் விக்ரகம், பல்லவ காலச் சிற்பத்தை உணர்த்துவதாக உள்ளது என்கின்றனர் தொல்லியல் துறை ஆய்வாளர்கள்.

பிராத்தனை :
 விவசாயம் செழிக்கவும், பிரச்சனைகள் இன்றி நிம்மதியாக வாழவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
 நேர்த்திக்கடன்:
 சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக