
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிவாவும்,
ஹரியும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை
என்பதால் இருவரும் அவரவர் பெற்றோர்களுக்கு உதவி செய்ய எண்ணினார்கள். அதனால்,
இருவருடைய வீடுகளிலும் மாடுகள் வளர்ப்பதால் அவற்றை மேய்ப்பதில் உதவி செய்ய முடிவு
செய்தார்கள்.
அவ்வாறு
தினமும் மாடுகளை மேய்க்கச் செல்லும்போது ஹரி தனது மாடுகளை புல்வெளியில்
மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு அவன் நண்பர்களுடன் சேர்ந்து காசு வைத்து கோலி விளையாட
சென்றுவிடுவான். இதுபோல் செய்வது தவறு என்று சிவா, ஹரியிடம் பலமுறை
கூறியிருக்கிறான்.
ஆனால்,
அவன் அதை காதில் வாங்கிக்கொள்ள மாட்டான். சிவா, ஹரியிடம்! மாடுகளை இப்படி
கவனிக்காமல் விட்டுவிட்டால் அவை வழி தவறக்கூடும். அதே சமயம், நீ இப்படிக் காசு
வைத்து விளையாடுவது மிகவும் தவறான செயல் என்று கண்டித்தான்.
அதற்கு
ஹரி என்ன ஐம்பது பைசா, ஒரு ரூபாய் வைத்துத்தானே விளையாடுகிறேன். இது ஒன்றும் பெரிய
தொகை அல்ல என்று எப்போதும் போல சமாளித்துக் கூறிவிடுவான். சிவாவும் தன்
வார்த்தைக்கு மதிப்பும் இல்லை, பிரயோஜனமும் இல்லை என்று எண்ணி ஹரிக்கு அறிவுரை
கூறுவதை நிறுத்திவிட்டான்.
ஒருநாள்
நல்ல உச்சி வெயில். சூரிய வெப்பம் மிகக் கடுமையாக இருந்ததால் அனல் காற்று வீசியது.
அந்த நேரத்தில் சிவா புளிய மரத்தடியில் கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.
அப்போது மற்றொரு நண்பன் பதற்றமாக ஓடிவந்ததைக் கண்டு திகைப்புடன் அவனைப்
பார்த்தான்.
ஓடி
வந்தவன் ஹரி எங்கே? கார் ஒன்று அவன் பசுமாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகி
விட்டது! என்றான்.
இதைக்
கேட்டவுடன் சிவா எதுவுமே பேச முடியாமல் வாயடைத்துப் போனான். உடனே சிவா, ஹரி
விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஓடினான். அவன் நினைத்தது போல ஹரியும் அவன்
நண்பர்களும் சத்தமிட்டபடி உற்சாகமாக கோலி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
டேய்
ஹரி! உன் மாடு காரில் அடிபட்டுவிட்டது! என்றதும், அனைவரும் சாலையை நோக்கி
ஓடினார்கள். சாலையின் நடுவில் மாடு அடிபட்டுக் கிடந்தது. மக்கள் அதைச் சுற்றி
கூட்டமாக நின்றிருந்தனர். மாட்டின் மீது மோதிய கார் சாலையிலிருந்து விலகி
பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது. காரினுள் இருந்தவர்கள் தட்டுத்தடுமாறி காரின்
கதவைத் திறந்துகொண்டு வெளியில் காயத்துடன் கிடந்தனர்.
விபத்தை
முதலில் கண்ட ஒரு பெரியவர், காரினுள் நிறைய பொருட்கள் வைத்திருப்பார்கள் போல,
பெட்டி பெட்டியாக இருக்கிறது. அந்தப் பெட்டிகளிடையே சிக்கிக் கொண்டதால் இன்னும்
காயம் பலமாக இருக்கலாம் என்றார்.
இன்னொரு
கிராமவாசி, கார் ஓட்டுநர் வேகத்தை ஓரளவுதான் குறைக்க முடிந்தது. பசுமாடு
திடீரென்று குறுக்கே வந்ததால் கார் திசைமாறி சாலையை விட்டு விலகி பள்ளத்தில்
இறங்கிவிட்டது. பசுமாடு என்ன செய்யும்? பாவம்! அது ஐந்தறிவு உள்ள விலங்குதானே?
மாடு
மேய்ப்பவனைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்! நான் மட்டும் அவனைப் பார்த்தால் நல்லா
நாலு வார்த்தை கேட்பேன். அவனுடைய கவனக்குறைவால் இப்படி ஒரு விபத்து நடந்துவிட்டதே!
என்று அங்கிருந்தவர்கள் ஆத்திரப்பட்டார்கள்.
இதையெல்லாம்
கேட்டுக்கொண்டு சிவாவும், ஹரியின் நண்பர்களும் கூட்டத்தினரிடையே இருந்தார்கள்.
அதைக் கேட்ட ஹரி சிவாவிடம் உன் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த விபத்து
நடந்திருக்குமா? இப்போது பார்த்தாயா எத்தனை உயிர்கள் இதனால்
பாதிக்கப்பட்டிருக்கின்றன? எல்லாம் என்னுடைய விளையாட்டுப் புத்தி, கவனக்குறைவினால்
வந்தது என்று பெருங்குரலெடுத்து அழுதான்.
இனிமேல்
எதுவும் செய்ய முடியாது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில்
இறங்கலாம், வா..! இனிமேலாவது கவனத்துடன் இரு! என்று கூறி சிவா அவனை
சமாதானப்படுத்தி அழைத்து சென்றான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக