இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ரம்புட்டான்
பல அளவான இனிப்புடன், அட்டகாசமான சுவையுடன் உள்ள இயற்கையின் படைப்பு. லேசான
புளிப்பு கலந்த இனிப்புடன் காணப்படும் இந்த பலத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள்
வரை அனைவருமே விரும்பி உண்கின்றனர்.
சத்துக்கள்:
இந்த
சின்ன ரம்புட்டான் பழத்தில், புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்துகள்,
அதிக அளவு நீர்சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ்,
பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள், விட்டமின் சி, விட்டமின்
பி1(தயாமின்), விட்டமின் பி3(நியாசின்), விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) போன்ற
ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்:
ரம்புட்டானின்
இலை, பட்டை, வேர் மற்றும் பழம் போன்றவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி
உள்ளிட்டவைகளுக்கு ரம்புட்டான் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இது இரும்பு
சத்தின் மூல ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது.
இரும்புச்சத்து இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்ல உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை, சோர்வு, மயக்கம் ஆகியவற்றை இப்பழத்தினை உண்டு சரி செய்யலாம்.இப்பழத்தில் காணப்படும் பாஸ்பரஸ் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகம் நன்கு செயல்படச் செய்கிறது.

எச்சரிக்கை:
இந்த
பழத்தில் இனிப்பு சுவை அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு
உண்பது நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக