Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 நவம்பர், 2019

தங்கத்தின் தேவை குறையப் போகுது... உலக தங்க கவுன்சில் எச்சரிக்கை!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நடப்பு ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 8 சதவீதம் வீழ்ச்சியடையப்போவதாக உலக தங்க கவுன்சில் எச்சரித்துள்ளது.


ஹைலைட்ஸ்
  • அக்டோபர் - டிசம்பர் மாதங்களில்தான் பண்டிகை சீசனை முன்னிட்டு தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும்.
  • 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் பயன்பாட்டில் இந்தியா மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கவுள்ளது.
தங்கம் நுகர்வு அல்லது பயன்பாட்டில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியாவில் சமீப காலமாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் பயன்பாட்டில் கிராமப் புறங்களில்தான் தங்கம் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. நகைகள் தயாரிப்புக்காகவே தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சூழலில் இந்த ஆண்டில் தங்கம் பயன்பாடு குறையும் சூழல் இருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. பொதுவாக, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில்தான் பண்டிகை, திருமண சீசனை முன்னிட்டு தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் விலையேற்றம் காரணமாக தங்கம் விற்பனை அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.

இந்த ஆண்டில் இந்தியாவின் தங்கத்துக்கான தேவை 700 டன்னாக மட்டுமே இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 8 சதவீதம் குறைவாகும். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் பயன்பாட்டில் இந்தியா இந்த ஆண்டில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கவுள்ளது.

ஜூன் - செப்டம்பர் மாதங்களில் பருவமழை பொய்த்ததால் கிராமப்புறங்களில் வருவாய் குறைந்து தங்கம் வாங்கும் திறனும் குறைந்திருக்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் நுகர்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது. இதன் காரணமாகவும், விலையேற்றம் காரணமாகவும் தங்கம் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!