Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 டிசம்பர், 2019

வண்ணமயமான பூக்கள்... பிரையண்ட் பூங்கா!...!!

Image result for பிரையண்ட் பூங்கா!...!!

பிரையண்ட் பூங்கா கொடைக்கானலில் இருந்து 1கி.மீ தொலைவிலும், பழனியிலிருந்து 66கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

 பிரையண்ட் பூங்கா நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும்.
 இந்த பூங்காவை திட்டமிட்டு கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட் என்ற காட்டிலாகா அதிகாரியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.

 இப்பூங்காவில் பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன.

 உச்ச பருவத்தின் போது வண்ணமயமான பூக்கள் இங்கு பூத்து குலுங்கும்.
 இங்கு ஒரு யூக்கலிப்டஸ் மரம் ஒன்று உள்ளது. இதே போல் பழமை வாய்ந்த போதி மரம் ஒன்றும் உள்ளன. இவையிரண்டும் இவ்விடத்திற்கு சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை அளிக்கின்றன.

 பல அலங்காரச் செடிகள் மற்றும் மரங்களும் இங்குள்ள செடி வளர்ப்புப் பண்ணையில் கிடைக்கும்.
 உச்சி காலத்தில் இப்பூங்காவில் தோட்டக்கலை பற்றிய பொருட்காட்சிகளும் நடக்கும்.

எப்படி செல்வது?

 திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எப்போது செல்வது?

 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

இதர சுற்றுலாத் தலங்கள் :

 குணா குகைகள்
 தொப்பித் தூக்கிப் பாறைகள்
 மதி கெட்டான் சோலை
 செண்பகனூர் அருங்காட்சியகம்
 டால்பின் நோஸ் பாறை
 பேரிஜம் ஏரி
 அமைதி பள்ளத்தாக்கு
 செட்டியார் பூங்கா
 படகுத் துறை
தற்கொலை முனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!