டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி வெப்பநிலை குறைவாகவே காணப்படும்.
இந்த காலக்கட்டத்தில் வீட்டில் ஏசி பயன்பாடு என்று எதுவும் தேவை இருக்காது. ஆனால்
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் போன்ற மாதங்களில் கடுமையான வெயில் தாக்கம் அதிகமாகவே
இருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஏசி பயன்பாடு என்பது அத்தியாவசியமாக இருக்கும்.
ஏசி விற்பனை மந்தநிலை
2019ம் ஆண்டில் ஏசி விற்பனை மந்தநிலையில் இருந்ததால் வரும்
3 மாதங்களில் ஏசி நிறுவனங்கள் 30-35 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட
வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
புதிய வகை ஏசி அறிமுகம் செய்ய முயற்சி
அதேபோல் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய தயாரிப்புகளை
அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதை உறுதி
செய்யும் விதமாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
24 டிகிரியாக நிர்ணயிக்க உத்தரவு
புத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏர்கண்டிஷனர்களில் இயல்பான
வெப்ப நிலையாக 24 டிகிரி செல்சியஸ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய
அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மின்சாரத்தை சேமிக்க உத்தரவு
தற்போது 18 முதல் 21 டிகிரி செல்ஷியஸ் டிகிரி வரை இயல்பு
வெப்பநிலையாக உள்ளது. இதை 24 ஆக உயர்த்தும் போது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்
மதிப்பிலான மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம்
கணித்துள்ளது.
மின்கட்டணத்தை சேமிக்க முடியும்
24 டிகிரியில் வைத்து ஏ.சி.யை பயன்படுத்தினால் 4 ஆயிரம்
ரூபாய் வரையும், அதை 27 டிகிரியாக அதிகரித்தால் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரையும்
வருடாந்திர மின்கட்டணத்தில் சேமிக்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 28 டிகிரியாக உயர்வு
25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது மனித உடலுக்கு
பாதுகாப்பானது என்று கூறியுள்ள எரிசக்தி அமைச்சகம், ஜப்பானில் ஏ.சி.க்களின் இயல்பு
வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக