சீனாவில் சியோமியின் துணை நிறவனமான ரெட்மி தனது
ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் ரெட்மி
கே20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 5ஜி வசதி கொண்ட இந்த ரெட்மி கே30
சாதனத்தில் 64எம்பி கேமரா மற்றும் அருமையான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. இப்போது ரெட்மி கே30 சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.
6.67-இன்ச்
முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச்
முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2400 பிக்சல்
திர்மானம் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு
கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் திரை சிறந்த பாதுகாப்பு
அம்சம் மற்றும் கேமிங், வீடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி
வெளிவந்துள்ளது.
மென்பொருள்
வசதி
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக
கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன்765சிப்செட் வசதி
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான இயங்குதளத்தை
கொண்டுள்ளது.
சேமிப்பு
வசதி
இந்த ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி
/12ஜிபிரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/ 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக்
கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார்
இடம்பெற்றுள்ளது.
கேமரா
அம்சம்
ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்
64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி
டெப்த் சென்சார் என மொத்தம் நான்குகேமராக்கள்
இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் முன்புறம் 20எம்பி+ 2எம்பி என டூயல்
செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.
பேட்டரி
மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச்
பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த
சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்,
பீடோ,க்ளோனாஸ் மற்றும் கலிலியோ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
அட்டகாசமான
விலை
சீனாவில் 6ஜிபிரேம் கொண்ட ரெட்மி கே30
ஸ்மார்ட்போனின் விலை 1999யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,140) 8ஜிபிரேம் கொண்ட
ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் விலை 2299யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,160)
12ஜிபிரேம் கொண்ட ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் விலை 2599யுவான் (இந்திய மதிப்பில்
ரூ.26,189)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக