விமானம் மாயம் என்ற செய்தி அவ்வப்போது வலம் வருவதை
பார்த்திருப்போம். அதற்கான காரணங்கள் பலவற்றில் ஒன்று விமான நிலையத்துடனான ரேடார்
தொடர்பு துண்டிப்பு. ரேடார் உடனான தொடர்பு துண்டிக்கப்படும் போது, விமானம் திசை
தெரியாமல் போகிறது.
மோசமான பருவநிலை கூட
காரணம்
அப்படி மாயமான விமானங்கள் கடலில் இருந்தோ அல்லது
தரைப்பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மோசமான பருவநிலை
காரணமாகவும் தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ராணுவ விமானம் மாயம்
இந்த நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின்
தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்ற ராணுவ
விமானம் மாயமானதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.
ஏசி-130 ஹெர்குலஸ்
விமானம்
ஏசி-130 ஹெர்குலஸ் வகையை சேர்ந்த அந்த விமானம் உள்ளூர்
நேரப்படி நேற்று பிற்பகல் 4.55 மணியளவில் புறப்பட்டுச்சென்றதாகவும், சிறிது
நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரேக் நதிக்கு இடையில்
விமானம் மாயம்
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலை இணைக்கும் டிரேக் எனும்
நதிக்கு இடையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த போது, விமானத்துடனான தொடர்பு
துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விமானத்தின் தற்போதைய நிலை
குறித்து மும்முரமாக ஆராயப்பட்டு வருகிறது.
அதிநவீன போர் விமானம்
ஏசி-130 ஹெர்குலஸ் ரக விமானம் அந்நாட்டின் அதிநவீன போர்
விமானங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. கிங் ஜார்ஜ் தீவில் முக்கிய பணிகளை
மேற்கொள்வதற்காக இதில் பயணம் மேற்கொண்டவர்கள் சென்றார்கள் என்று கூறப்படுகிறது.
38 பேர் பயணித்தனர்
இந்த விமானத்தில் 38 பேர் பயணித்துள்ளனர். மாயமான விமானத்தை
தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர்பு
துண்டிக்கப்பட்ட இடத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிலி அதிபர் வருத்தம்
விமானம் மாயமானது குறித்த தகவல் அறிந்ததும், அதிர்ச்சி
அடைந்ததாக தெரிவித்துள்ள சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா, நிலமையை உன்னிப்பாக
கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக