Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 டிசம்பர், 2019

குழந்தைகளின் சளி மற்றும் இருமலை போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்...!!

cold


குழந்தைகளில் சிலருக்கு இந்த மருத்துவ முறைகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு இதனை  பின்பற்றுவது நலம் தரும்.

தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போட்டு, அதனை குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள்.

குழந்தையை யூகலிப்டஸ் ஆயிலை சுவாசிக்க வையுங்கள். மேலும் குழந்தை படுக்கும் இடத்தை சுற்றி யூகலிப்டஸ் ஆயிலை சிறிது  தெளிக்கலாம்.

விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு  நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க  வைக்கலாம். 

குழந்தைகள் குடிக்கும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் சளியை நீக்கும்.

சளி தொந்தரவால் உங்கள் குழந்தை தூங்க சிரமப்பட்டால், தலையணையை குழந்தையின் முதுகுப்புறம் வைத்து சற்று சாய்வான முறையில் குழந்தையை தூங்க வையுங்கள். இதனால் மூக்கில் இருந்து சளி தொந்தரவு வராமல் குழந்தை நிம்மதியாக தூங்கும்.

2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த  தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர  வேண்டும்.

சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக்  கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட  குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!