இயந்திர துப்பாக்கியுடன் இணைக்கப்பட்ட ட்ரோன்
அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் என்று அதன் தயாரிப்பாளர்கள்
தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தில் துப்பாக்கியுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் டெலிவரி
கிடைக்கும்போது, துப்பாக்கி வைத்து ட்ரோன் பயன்படுத்தும் முதல் நாடாக துருக்கி
அமைகிறது.
25கிலோகிராம்
அதாவது 25கிலோகிராம் ட்ரோனில் எட்டு
சுழுலும் கத்திகள் உள்ளன. பின்பு அதன் இயந்தி துப்பாக்கியில் 200சுற்று
வெடிமருந்துங்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோனின் ஒற்றை
ஷாட்டுகள் 15சுற்று வெடிப்புகளை சுடமுடியும்.
சோங்கர்
இந்த புதிய வைகை ட்ரோனின் பெயர்
சோங்கர் (Songar) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ட்ரோன் மாடலை அங்காராவைச்
சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான அசிஸ்கார்ட் தயாரித்துள்ளது. குறிப்பாக
அசிஸ்கார்ட் நிறவனம்தெரிவித்தது என்னவென்றால் துப்பாக்கியால் பொருத்தப்பட்ட முதல்
ட்ரோன் மற்றும் சேவைக்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் துருக்கி
ராணுவத்திற்கு ட்ரோன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்லியமாக
சுடுவது கடினம்
ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்வென்றால்,
ட்ரோன் துல்லியமாக சுடுவது கடினம், ஓரளவு வீச்சு மற்றும் கோணத்தை தீர்மானிப்பதில்
சிரமம் இருப்பதாலும், ஒவ்வொரு ஷாட்டிலிருந்தும் பின்வாங்குவது ட்ரோனை கணிசமாக
நகர்த்துவதால் அடுத்த சுற்றுக்கான நோக்கத்தை பாதிக்கிறது. இந்த சவால்களை சமாளிக்க
சோங்கருக்கு இரண்டு அமைப்புகள் உள்ளன. கேமராக்கள் மற்றும் லேசர் ரேஞ்ச்ஃபைண்டர்
உள்ளிட்ட சென்சார்களைப் பயன்படுத்தி தூரம், கோணம் மற்றும் காற்றின் வேகத்தைக்
கணக்கிடவும், எங்கு நோக்கம் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது ரோபோ ஆயுதங்களின் தொகுப்பாகும், இது இயந்திர துப்பாக்கியை
நகர்த்துவதன் விளைவுகளை ஈடுசெய்யும்.
அசிஸ்கார்ட்
நிறுவனம்
இந்த புதிய வகை ட்ரோன் துல்லியத்தை
மேம்படுத்துவதால் 400 மீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்து இலக்குகளை விரைவில்
அடைய முடியும் என்று அசிஸ்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்த ட்ரோனில்
இரவு நேரத்திற்கு தகுந்தப சென்சார்கள்
பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு ரீமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி இந்த சாதனத்தை
எளிமையாக இயக்க முடியும்.
நூறாயிரக்கணக்கான
மக்கள்
சிரியாவுடனான சேர்ந்து துருக்கி
இராணுவம் எல்லையில் ரோந்து செல்வதில் ஈடுபட்டுள்ளது, இதற்கு இந்த ட்ரோன் வகைகளை
பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துருக்கி எல்லை நகரங்களில்
வான்வழித் தாக்குதல்களை
நடத்தியது, இதன் விளைவாக
நூறாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர், அத்துடன் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளும்
வெளிவந்த வண்ணம் உள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக