Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜனவரி, 2020

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்.! 18 பேர் பலி..500க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்.! 18 பேர் பலி..500க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!


துருக்கி நாட்டில் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. இது கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் ரிக்டரில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பின்னர் வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்னளர். நிலநடுக்க பாதிப்பினால், 18 பேர் பலியாகியும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் சிலர் இன்னும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலநடுக்கத்திற்கு பின் 60 முறை அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இதனையடுத்து அந்த பகுதிக்கு 400க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1999-ம் ஆண்டு துருக்கியின் மேற்கே இஸ்மித் நகரில் ஏற்பட்ட, ரிக்டரில் 7.4 அளவிலான கடுமையான நிலநடுக்கத்திற்கு 17 ஆயிரம் பேர் பலியாகினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக