பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னிப்
பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் 18004256151 என்ற இலவச
எண்ணில் புகார் அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுக்குறித்து
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியாதாவது:-
வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
11.01.2020 முதல் 21.01.2020 வரை இயக்கப்பட உள்ள ஆம்னிப் பேருந்துகளில் பயணிக்கும்
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்து மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள்
தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை 1800 425 6151 என்ற எண் மூலம்
புகார் தெரிவிக்கலாம்.
02.12.2019 முதல் 08.01.2020 வரை
தமிழகம் முழுவதும் வாகன சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் 22,295
வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராத தொகையாக ரூ,2,21,23,125 அபராதமாக
ரூ,4,64,06,750 நிர்ணயிக்கப்பட்டது வாகன வரியாக தொகை ரூ,1,15,94,095 மற்றும்
வரியாக ரூ,32,15,818 நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆக மொத்தம் ரூ 8,33,39,788 (ரூபாய்
எட்டு கோடி முப்பத்து மூன்று இலட்சத்து முப்பத்து ஒன்பது ஆயிரத்து எழுநூற்று
எண்பத்து எட்டு மட்டும்) அரசு வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது மேலும் 2224 வாகனங்கள்
பல்வேறு குற்றங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டுள்ளது இவ்வகையான சிறப்பு தணிக்கை
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேற்காணும் சிறப்பு தணிக்கை போலவே,
வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து
துறையின் மூலம் தமிழகம் முழுவதும் இயங்கும் ஆம்னிப் பேருந்துகளில் மோட்டார் வாகன
சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் மீது
நடவடிக்கை எடுக்க சரக அளவில் பல்வேறு குழுக்கள் இணைப் போக்குவரத்து ஆணையர், துணைப்
போக்குவரத்து ஆணையர், தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும்
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு செயலாக்கப் பிரிவின் மூலம் சிறப்பு தணிக்கை
குழு அமைக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் பொது மக்கள் சிரமமின்றி
பாதுகாப்பான பயணத்திற்கும் போக்குவரத்து துறையின் மூலம் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக