Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஜனவரி, 2020

உலகளவில் ‘500 கோடியை’ தாண்டிய வாட்ஸ் அப்.! சாதனையின் உச்சத்தில்.!

உலகளவில் ‘500 கோடியை’ தாண்டிய வாட்ஸ் அப்.! சாதனையின் உச்சத்தில்.!


பொதுவாக பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பிரபலங்கள், அவரகளது மொபைலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் இல்லாதவர்களே இருக்க முடியாது.
ஏனென்றால், அவ்வளவு பிரபலமான இந்த செயலிகள் மக்கள் மத்தியில் இந்த ஒரு பொழுதுபோக்காக வலம் வருகிறது. அப்படி இல்லையென்றாலும், ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துகொள்வார்கள்.
இந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவது சுலபமாக இருப்பதால், எந்த செய்தியை இருந்தாலும் உடனுக்குடன் தெரிந்துகொண்டு, பகிர்ந்து கொண்டு வருகின்றோம். இந்நிலையில், பிளே ஸ்டோரில் கூகுள் அல்லாத, உலகளவில் பல கோடி டவுன்லோடுகளை கடந்த 2-வது செயலியாக வாட்ஸ்அப் பெருமை பெற்றுள்ளது.
இந்த டவுன்லோடு எண்ணிக்கை பிளே ஸ்டோர் மட்டுமின்றி சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சாதனங்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட பதிப்புகளையும் சேர்த்தது ஆகும்.
இதனிடையே இதற்கு முன்னதாக 500 கோடி டவுன்லோடுகளை கடந்த முதல் அப்ளிகேஷன் என்ற பெருமையை பேஸ்புக் பெற்றது. தற்போது வாட்ஸ் அப்பும், அந்த லிஸ்டில் வந்தது.
இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் 100 கோடி கடந்து வருகிறது. உலகம் முழுக்க பிரபல செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை தற்சமயம் 160 கோடியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து பேஸ்புக் மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 130 கோடியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக