Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 ஜனவரி, 2020

நிர்பயா வழக்கில் தள்ளிப்போன தூக்குத்தண்டனை ..!7 நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் – மத்திய அரசு மனு

நிர்பயா வழக்கில் தள்ளிப்போன தூக்குத்தண்டனை ..!7 நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் – மத்திய அரசு மனு


டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.
பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.
எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார்.மேலும் கருணை மனுவை  உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது.குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அப்பொழுது மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும் மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில்,முக்கிய வழக்குகளில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் உச்சநீதிமன்ற உத்தரவுகளை பயன்படுத்தி சட்டத்துடன் விளையாடி வருகின்றனர்.
தூக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்களில் குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய வேண்டும்.கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களில்  தூக்கு தண்டனை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு , அடுத்த 7 நாளில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து நீதிமன்றங்கள், மாநில அரசுகள், சிறை நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இருக்கும் விதிமுறைகளின்படி, கருணை மனு நிராகரிக்கப்பட்டால், அந்த குற்றவாளிக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.இதனால் தான் நிர்பயா வழக்கில் ஜனவரி 22-ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனை பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது .எனவே தண்டனையை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!