Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

எட்டாம் வகுப்பு மாணவனோடு மாயமான ஆசிரியை!




குஜராத்தில் எட்டாம் வகுப்பு மாணவனோடு தொடர்பில் இருந்த ஆசிரியை மாணவனை அழைத்துக் கொண்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் காந்திநகரில் உள்ள உதயோக் பவன் அரசு அலுவலகத்தில் பணிபுரிபவரின் 14 வயது மகன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போயிருக்கிறான். இதுகுறித்து அந்த அரசு அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். காணாமல் போன மாணவன் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரிக்க சென்றபோது வெள்ளிக்கிழமை முதல் அவர்களது ஆசிரியையும் பள்ளிக்கு வராதது தெரிய வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது மாணவனோடு ஆசிரியை பல நாட்களாக தவறான தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மாணவனும், ஆசிரியையும் ஒன்றாக மாயமாகிவிட்ட நிலையில் அவர்களை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். மாணவன் விருப்பப்பட்டே ஆசிரியையோடு சென்றிருந்தாலும் 14 வயது பையனை ஆசைக்காட்டி அழைத்து செல்வது கடத்தல் என்றே கருதப்படும் என்பதால் ஆசிரியை மீது ஆள்கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக