Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்ட குற்றவாளி தாய் .!

நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்ட குற்றவாளி தாய் .!



டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
அதில் ஒருவர் சிறுவன் என்பதால் அந்த சிறுவனை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதியுள்ள 5 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.
சிறையில்இருந்த 4 பேரும் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் உச்சநீதிமன்றம் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. இந்நிலையில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் தாய் என் மகனை எனக்கு திருப்பி கொடுங்கள்,என் மகனுக்கு உயிர்பிச்சை கொடுங்கள் நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்டுள்ளார்.
ஆனால் ஆஷா தேவி என் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதிக்காக  கடந்த 7 ஆண்டுகளாக காத்து இருந்ததாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக