Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு.

Breaking:நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு.!


டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
அதில் ஒருவர் சிறுவன் என்பதால் அந்த சிறுவனை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.மீதியுள்ள 5 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.இந்நிலையில் 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு  மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக