பொங்கல் திருநாளில் மதுரை மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள புதிய விதிமுறைகளை மதுரை
கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக காளைகள் மற்றும் வீரர்கள் தயாராகி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை 18 முதல் 45 வயது வரை உள்ள வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளலாம் என்று விதிமுறை இருந்தது. ஆனால் காளையினால் அதிகம் காயம் அடைபவர்கள் இளைஞர்களாக இருப்பதால் குறைந்த பட்ச வயது வரம்பு 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஜனவரி 10ம் தேதி நடைபெறும் உடல்தகுதி பரிசோதனையில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக