Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 27 ஜனவரி, 2020

பயணிகளால் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி மூடல்.! இலவசமாக செல்லும் வாகனங்கள்.!


பயணிகளால் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி மூடல்.! இலவசமாக செல்லும் வாகனங்கள்.!


நேற்று சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் திருச்சி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது அந்த அரசு பேருந்து ஓட்டுநரையும் , நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்களை அடித்து நொறுக்கினர்.இதைத்தொடர்ந்து வாகனங்களுக்கு கட்டண வசூல் வசூலிக்காமல் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் , கண்டக்டர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் என 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.இந்நிலையில் சுங்கச்சாவடி முழுவதும் சூறையாடப்பட்டதால் சேதம் அடைந்த பொருட்களை மாற்றி சரிசெய்ய ஒருவார காலம் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் சுங்கச்சாவடியில் இரண்டாவது நாளாக கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!