Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

தவறு செய்தவர்களைத் தவிர அனைவரும் மன்னிக்கப்படுவர் – கொலை நடந்த வீட்டில் கடிதத்தால் பரபரப்பு !



கேரளாவின் திருச்சூர் பகுதியில் வசித்து குடும்பத்தினரில் கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தைபரம்பத் வினோத். இவருக்கும் ரேமா என்ற மனைவியும் நயானா என்ற மகளும் நீரஜ் என்ற மகனும் உள்ளனர். நல்ல வசதியான வினோத், தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக வினோத் மற்றும் ரேமா ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த போலிஸார் இரு உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு கொலைந் நடந்த வீட்டில் சோதனை செய்தபோது. ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ’தவறு செய்தவர்களை தவிர மற்ற அனைவரும் மன்னிக்கப்படுவார்கள் ’ என எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை வைத்து இப்போது கொலையாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக