Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

புதிய Royal Enfield Classic 500 Tribute Black பைக் விற்பனையில் அறிமுகம்..!

புதிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 ட்ரூபியூட் பிளாக் எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.


ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புதிய கிளாசிக் 500 ட்ரூப்யூட் எடிசன் மோட்டார் சைக்கிள் ரூ. 2.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல், 2020 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதையொட்டி கிளாசிக் 500 பைக்குகளை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்தது ராயல் என்ஃபீல்டு.

கடந்தாண்டு அதிக இழுவைத் திறன் கொண்ட எஞ்சின் பைக்குகள், ராயல் என்ஃபீல்டுக்கு பெரியளவில் விற்பனையை பதிவுச் செய்யவில்லை. அதை தொடர்ந்தே, கிளாசிக் 500 பைக்கிற்கான உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்பக் கட்டத்தில் கிளாசிக் 500 மாடலுக்கான வரவேற்பு மிகவும் பிரபலமாக இருந்தது. அதை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கும் பொருட்டு, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ட்ரூபியூட் பிளாக் எடிசனை மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இந்த பைக்கிற்கான விற்பனை தொடங்கவுள்ளது. அதன்படி, மதியம் 2 மணியளவில் ராயல் என்ஃபீல்டு வலைதள பக்கத்தில் கிளாசிக் 500 ட்ரூபியூட் பிளாக் எடிசனுக்கான விற்பனை நேரலையில் தொடங்கும். அது மாலை 5 மணிக்கு நிறைவடைந்துவிடும்.

இதை முன்கூட்டியே புக் செய்து வைப்பதற்கு ரூ. 50 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த பைக்கிற்கான ட்ரூபியூட் வீடியோவையும் ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் பைக்கின் எரிபொருள் கலன் கையினால் வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது எனவும், ஆரம்பக் கட்டத்தில் இருந்து வந்த கிளாசிக் 500 தோற்றம் கொண்டு புதிய எடிசன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கடைசி யூசிஇ 500சிசி எஞ்சினுடன் கூடிய கடைசி சிங்கிள் சிலிண்டர் பைக் மாடலாக இந்த மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வரவுள்ளது. கிளாசி ட்ரூபியூட் பிளாக் என்கிற பளப்பளப்பான கருப்பு மற்றும் தங்க நிற வேலைபாடுகளுடன் கூடிய வண்ணப்பூச்சில் இந்த பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த குமார் சகோதரர்கள், இந்த பைக்கிற்கான வண்ணப்பூச்சு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த பைக்கில் End of Build என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் சென்று சேரும் வகையிலான விளம்பர நடவடிக்கைகளை கிளாசிக் 500 ட்ரூபியூட் பிளாக் எடிசனுக்கான மேற்கொண்டுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதற்கான நடவடிக்கைகள் சென்னையிலுள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ட்ரூபியூட் பிளாக் எடிசன் பைக்கில் பிஎஸ்-4 அம்சம் கொண்ட 499 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் 27.2 பிஎச்பி பவர் மற்றும் 41.3 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும்.

இதே எஞ்சின் தான் தண்டர்பேர்டு உள்ளிட்ட பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய தலைமுறை 350 ரேஞ்ச் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது விற்பனை செய்து பைக்குகளின் பிஎஸ்-6 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. மேலும், 2020 ஆண்டுக்கான தன்னுடைய அடுத்தக் கட்ட திட்டத்தையும் ராயல் என்ஃபீல்டு வகுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக