Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 13 மார்ச், 2020

கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி.!

canada-prime-ministers-wife-confirmed-to-have-coronavirus




கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக கனடா அரசு இந்திய மதிப்பில் ரூ.5,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் இதுவரை 91 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ள ஒரு பில்லியன் கனடா டாலர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!