தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் நிலையில்தான் உள்ளது. ஆனால் 3ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன என்றும் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து நோய்த்தொற்று உள்ளவர்களின் குடும்பத்திற்கு, அருகில் வசிப்பவர்களுக்கு ரேபிட் டெஸ்ட் பரிசோதனை செய்யப்படும் என்றும் கொரோனா வைரஸ் இருப்பதை மறைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் என தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் என்பது கூட்டுப்பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக