Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கொரோனாவை கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறை! யாருக்கெல்லாம் இச்சோதனை?!

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போதுவரை பாலிமரேஸ் செயின் ரியாக்சன் எனப்படும் பி.சி.ஆர் முறைப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொண்டை, நாசி பகுதியில் இருக்கும் சளி மாதிரியை கொண்டு கொரோனா முடிவுகள் வெளியாக 5 முதல் 12 மணிநேரம் ஆகிறது. தமிழகத்தில் உள்ள 19 ஆய்வகங்களில் இந்த முறைதான் பயன்பாட்டில் உள்ளது.

இதனால், முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால், அதற்குள் நோய் தொற்று பரவக்கூடும் என்பதால் , விரைவாக முடிவுகளை கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று 50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. மொத்தம் 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இந்த ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறை என்பது, ஒருவரது உடலில் கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த வைரசை எதிர்க்கும் எதிர்புரதமான ( ஆன்டிபாடி ) IgM, IgG ஆகியவை உண்டாகும். இந்த ஆன்டிபாடி நம் உடலில் சுரந்திருக்கிறதா இல்லையா என்பதை ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவி மூலம் அரை மணிநேரத்தில் கண்டறிந்து விடலாம்.  நமது உடலில் இருந்து ரத்தம், பிளாஸ்மா, சீரம் ஆகியவை கொண்டு இச்சோதனை செய்யப்படும்.    

இதன் மூலம் முதற்கட்டமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார், உறவினர்கள், பகுதிவாசிகள், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர்களுக்கு ரேபிட் டெஸ்ட் நடத்த உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக