Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

நர்ஸ்களிடன் அநாகரீக செய்கை!நிர்வாணமாக திரிகிறார்கள்-கதரும் டாக்டர்கள்

டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற தப்லிக் இ ஜமாத் உறுப்பினர்கள்  6 பேர் காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

தலைநகர் டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச்..,8 , 10 ஆகிய தேதிகளில் தப்லிக் இ ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டமானது நடைபெற்றது. இதில் நாடு முழுவதில் இருந்தும் கலந்து கொண்ட பலருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஸியாபாத் எம்.எம்.ஜி. மருத்துவமனை சார்பில் காவல்துறைக்கு புகார் கடிதம் அனுப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள்  ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும்.மிகவும் மோசமான பாடல்களை கேட்கின்றனர். மேலும் பணிபுரியும்  நர்ஸ்களிடம் அசிங்கமாக செய்கை செய்கின்றனர். மேலும் ஊழியர்களிடம் சிகரெட் கேட்டு தொல்லை செய்வதாகவும் இத்தகையோர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாக உள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.புகாரைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார்  நள்ளிரவில் விசாரணை நடத்தி அவ்வாறு நடந்துகொண்ட 6 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.மேலும் இவர்கள் 6 பேரையும் வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக