>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 3 ஏப்ரல், 2020

    அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோயில், ரங்கநாதபுரம், செட்டிநாயக்கன்பட்டி

    மூலவர் : சீனிவாச பெருமாள்
    உற்சவர் : -
    அம்மன்/தாயார் :ஸ்ரீதேவி பூமாதேவி 
    தல விருட்சம் :  ஆலமரம்
    தீர்த்தம் : - 
    ஆகமம்/பூஜை : வைஸ்ணவம்
    பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் 
    புராண பெயர் : ரங்கநாதபுரம் (கரட்டுப்பட்டி)
      ஊர் : ரங்கநாதபுரம்
      மாவட்டம் : திண்டுக்கல்
      மாநிலம் :  தமிழ்நாடு

     பாடியவர்கள்:
       
     
       
      திருவிழா:
       
       புரட்டாசி சனிதோறும், கிருஷ்ண ஜெயந்தி, மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம், புரட்டாசி சனி (4வது) சுவாமி புறப்பாடு உண்டு. 
       
      தல சிறப்பு:
       
      ஸ்ரீபகவான் சித்தரின் ஜீவசமாதியும், 14 அடி உயர ஆஞ்சநேயரும் சிறப்பு. 
       
     திறக்கும் நேரம்:
       
      காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
       
     முகவரி:
       
      அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோயில், ரங்கநாதபுரம், செட்டிநாயக்கன்பட்டி 624004 திண்டுக்கல். 
       
     போன்:
       
      +91 -98650-08856, 89257 14224, 99254-66667 
       
      பொது தகவல்:
       
       திண்டுக்கலில் இருந்து 6கி.மீ. தொலைவில் உள்ள ரங்கநாதபுர மலையில் கோயில் அமைந்துள்ளது. 175 படிக்கட்டுகள் உள்ளன. மலைக்கோயில் வரை  கார், பஸ் செல்ல வழியுண்டு. கோயிலின் முன்புறம் ஆஞ்சநேயர் கோயிலும், அதன்பின் விநாயகர் கோயிலும், அருகே சனீஸ்வரர் கோயிலும், அதனையடுத்து  பெருமாள் சன்னிதி உண்டு. சுற்றிலும் மரங்கள், உள்ளன. 
       

     பிரார்த்தனை
       
      திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைத்தல் 
       
     நேர்த்திக்கடன்:
       
      துலாபாரம் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. 
       
      தலபெருமை:
       
      ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பசுமையான காட்சி தரும் அரசமரம், நான் அரசனாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுவதை நினைவுகூர்வதாக உள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள். ஸ்ரீபகவான் சித்தர் பீடம், சக்கரத்தாழ்வார் சன்னிதி, சாந்த விநாயகர் இங்குள்ளது.

       
        தல வரலாறு:
       
      கி.பி. 1500ல் அச்சுத தேவராயர் காலத்தில் தாடிக்கொம்பில் சவுந்தராஜ பெருமாள் கோயிலும், செட்டிநாயக்கன்பட்டி அருகே கம்பத்துறை என்ற இடத்தில் கம்பம் ஒன்றும், அருகே பெருமாள் கோயில் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதுமுதல் இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். திண்டுக்கல் அருகே மலைமேல் பெருமாள் கோயில் உள்ளது தனிச்சிறப்பு. 
       
     சிறப்பம்சம்:
       
      அதிசயத்தின் அடிப்படையில்: ஸ்ரீபகவான் சித்தரின் ஜீவசமாதியும், 14 அடி உயர ஆஞ்சநேயரும் சிறப்பு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக