அமெரிக்கா
என்று சொன்னால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை ரஷ்யா, க்யூபா, ஈரான் போன்ற
நாடுகள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால்
இப்போது, அமெரிக்கா என்று சொல்லிவிட்டாலே சீனா தான... என, ஒரு சாதாரண வெகு ஜன
மக்கள் கூட கணிக்கும் அளவுக்கு பிரச்சனை அதிகரித்துவிட்டது.
அந்த
அளவுக்கு அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான நட்பு குறைந்துவிட்டது. அதற்கு
சமீபத்தில் நடந்த சில சம்பவங்களை ஆதாரமாகச் சொல்லலாம்.
சீனா
மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றி படித்து இருப்பீர்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு சீன பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது
அமெரிக்கா. அதற்கு சீனாவும் தன் தரப்பில் அமெரிக்க பொருட்கள் மீது பில்லியன் டாலர்
கணக்கில் வரி விதித்தது.
உடன்படிக்கை
இந்த
போரைத் தான் வர்த்தகப் போர் என்கிறோம். உலகின் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள், ஒரு
குடம் தண்ணீர் பிடிக்க, அடித்துக் கொள்ளும் குழாய் அடிச் சண்டை போல அடித்துக்
கொண்டதால் உலக பங்குச் சந்தைகள் சரியத் தொடங்கின. ஒட்டு மொத்த உலக ஏற்றுமதி இறக்குமதி
கூட பாதிப்புக்கு உள்ளானது. இதை தீர்த்துக் கொள்ள, இரு தரப்பும் சேர்ந்து ஒரு
டிரேட் டீல் கொண்டு வந்தார்கள்.
டீல் பாகம் 1
கடந்த
ஜனவரி 2020 மாதத்தில் தான் சீனா மற்றும் அமெரிக்கா டிரேட் டீலின் முதல் பாகத்தை
ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சீனா, அமெரிக்காவிடம்
இருந்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்,
என்பது தான் டீலின் மிக முக்கிய அம்சம்.
ரத்து செய்துவிடுவேன்
சில
வாரங்களுக்கு முன்பு தான், "சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல
அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை,
சீனா வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன்" என
மிரட்டினார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
சீன உறவை முறித்துக்
கொள்வேன்
சில
தினங்களுக்கு முன்பு, "அமெரிக்கா, சீனா உடனான உறவை, முழுமையாக முறித்துக்
கொள்ள முடியும். அப்படி முறித்துக் கொண்டால், அமெரிக்காவுக்கு சுமார் 500
பில்லியன் டாலர் இறக்குமதி செலவுகள் குறையும்" எனச் சொல்லி உலக பொருளாதார
அமைப்புகளுக்கே பகீர் கிளப்பினார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இப்போது போட்ட குண்டு
"சீனாவின்
பேச்சாளர் முட்டாள் தனமாகப் பேசுகிறார். சீனா, உலகம் முழுக்க பரப்பிய கொரோனா
வைரஸால் ஏற்பட்ட வலி மற்றும் இறப்புகளை திசை திருப்பப் பார்க்கிறார் சீன
பேச்சாளர்" என இன்று மே 21, 2020 காலை 7.06-க்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்
ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து இருக்கிறார்.
குண்டு 2
மேலும்
"அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு, கொரோனா வைரஸ் தொடர்பாக, சீனா வேண்டும்
என்றே தவறான தகவல்களைக் கொடுத்தது மற்றும் propaganda attack மிகவும்
அவமானகரமானது" என ஐரோப்பாவையும் கோர்த்துவிட்டு இருக்கிறார் அமெரிக்க அதிபர்
டொனால்ட் ட்ரம்ப்.
குண்டு 3
இன்னொரு
ட்விட்டில் "இவை எல்லாமே மேலிருந்து வந்தவைகள். அவர்கள், இந்த கொரோனா வைரஸை
எளிதில் நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை" என ட்விட்
செய்து இருக்கிறார். மறைமுகமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை குற்றம் சாட்டுவதாகத்
தெரிகிறது.
குண்டு 4
"சீனா
ஒரு மிகப் பெரிய பொய் பிரச்சாரத்தில் இருக்கிறது. ஏன் என்றால், சீனாவுக்கு தூங்கி
வழியும் ஜோ பிடன் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி
பெற்றால், நான் வருவதற்கு முன்பு வரை, பல ஆண்டுகளாக சீனா, அமெரிக்காவை ஏமாற்றியது
போல ஏமாற்றலாம்." என சீனாவை வைத்து செய்து இருக்கிறார் ட்ரம்ப்.
தேர்தல்
அமெரிக்க
அதிபர் ட்ரம்ப், அமெரிக்கர்கள் தான் அதிகம் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு
இருக்கிறார்கள். இதற்கு சீனா பதில் சொல்ல வேண்டும் என கோவப்படுவதைக் கூட புரிந்து
கொள்ள முடிகிறது. ஆனால் மனிதர் இப்போது சீனாவை, தன் தேர்தல் வியூகத்துக்கும்
பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கும் போது தான், அரசியல் நாகரீகம் அமெரிக்காவிலும்
இல்லையா..? என வருத்தமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக