Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மே, 2020

ஊரடங்கு நேரத்தில் கள்ளநோட்டு அடித்த பலே கும்பல்!

fake currency printing gang

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ள நோட்டு கும்பலிடமிருந்து ரூபாய் 65 லட்சம் பணம் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த மூங்கிதான்பட்டி டாஸ்மாக் கடைக்கு கடந்த 16ம் தேதி மதுபானம் வாங்க வந்த கீழ துருவாசகபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் 200 ரூபாய் நோட்டுகள் இரண்டை கொடுத்தார். அந்த நோட்டின் மீது சந்தேகம் அடைந்த கடை மேற்பார்வையாளர் முருகானந்தம் இதுபற்றி திருமயம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சந்தோஷ் குமாரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில் சந்தோஷ்குமார் ராமச்சந்திரன் திருமயத்தை சேர்ந்த முகமது இப்ராகிம், முகம்மது நசுருதீன் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்து 49 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைது செய்து அவரிடமிருந்து 64 லட்சத்து 91 ஆயிரத்து 540 மதிப்புள்ள கள்ள நோட்டுகள், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், அச்சு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும் இந்த கள்ள நோட்டுகளை தமிழகம் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனரா புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் இந்த கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு உள்ளார்கள், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக