ஜோதிகாவின் பொன்மகள் வந்தா ரம்ஜான் அன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
அதனையடுத்து இந்த படத்தை OTT platform இல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. அமேசான் பிரேம் அந்த படத்தை 9கோடி கொடுத்து வாங்கியதாகவும், அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்து சூர்யா நிறுவனங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரம்ஜான் அன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதாவது வரும் 25ம் தேதி பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரேமில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக