எங்களை பற்றி
எங்களை தொடர்பு கொள்ள
தனியுரிமைக்கொள்கை
சேவை விதிமுறைகள்
பொறுப்பு துறப்பு
விளம்பரம் செய்ய
Toggle navigation
ஈஸியா கத்துக்கலாம் வாங்க
உள்ளூர் முதல் உலகம் வரை
அறிந்து கொள்வோம்
சமையல் குறிப்புகள்
ஆன்மிகமும் - ஜோதிடமும்
அமானுஸ்யம்
அந்த நாள் ஞாபகம்
அருள்தரும் ஆலயங்கள்
மேலும் சில ;
குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
வரலாறு;
பாட்டி வைத்தியம்
Allow Your JavaScript To View This Awesome Widget. {
+ Grab this Widget
}
Learn Carnatic Music in Online
Click here to join our WhatsApp channel
Click here to join our Telegram Channel
வியாழன், 21 மே, 2020
ShareChat-ல் 101 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்..!
புதிய பொடியன்
வியாழன், மே 21, 2020
இந்தியாவின் முன்னணி சோஷியல் மீடியா நிறுவனமாகத் திகழும் ஷேர்சாட் ஏற்கனவே சீன நிறுவன வருகையால் கடுமையான வரத்தகப் போட்டியைச் சந்தித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு இந்நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் 25 சதவீத ஊழியர்கள் இன்று காலையில் பணிநீக்கம் செய்துள்ளனர்.
பேஸ்புக்-கிற்கு இணையாக 10க்கும் அதிகமான இந்திய மொழிகளில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் ஷேர்சாட் கொரோனா பாதிக்கப்பால் ஏற்பட்ட விளம்பர வருவாய் மற்றும் வர்த்தகப் பாதிப்பின் காரணமாக அதிகளவிலான வருவாய் இழந்துள்ளது.
இதன் எதிரொலியாக ஸ்விக்கி, சோமோட்டோ, cult fit, Oyo நிறுவனங்கள் செய்ததைப் போலவே ஷேர்சாட் நிறுவனமும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
ஷேர்சாட்
டிவிட்டரின் 100 மில்லியன் டாலர் முதலீட்டில் இயங்கும் ஷேர்சாட் இன்று காலையில் தனது ஊழியர்களுக்கு, பணிநீக்கம் குறித்து முக்கியமான ஈமெயில் அனுப்பியுள்ளது.
இந்நிறுவனம் துவங்கப்பட்டு வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், பல மடங்கு வளர்ச்சி அடைந்து அமெரிக்கச் சமுக வலைதள நிறுவனமான டிவிட்டரின் முதலீட்டைப் பெற்றது.
ஆனால் இந்நிறுவனத்தில் ஏற்கனவே பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
விளம்பர வருவாய்
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷேர்சாட் தளத்தின் மூலம் விளம்பர வருவாய் பெறத் துவங்கியது. ஆனால் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதிப்புகள், இந்நிறுவனத்தின் விளம்பர வர்த்தகம் மற்றும் வருவாயைக் கடுமையாகப் பாதித்தது.
தற்போது நாட்டின் ஒட்டுமொத்த விளம்பரத் துறையும் (Online & Digital) மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்குஷ் சச்தேவா
இன்று ஷேர்சாட் ஊழியர்களுக்கு, இந்நிறுவன சிஇஓ அன்குஷ் சச்தேவா அனுப்பிய ஈமெயிலில், "நம்முடைய கவனம் அனைத்தும் core product மற்றும் feed பரிந்துரையில் இருக்க வேண்டும், அதன் மூலமாகவே சந்தையில் போட்டி நிறுவனங்களுக்கு இணையாக வளர வேண்டும்" மேலும் "இந்த ஆண்டு விளம்பரத் துறையின் வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவுகளைக் கணிக்க முடியாத அளவிற்கு இருப்பதால், ஷேர்சாட் வருவாய் ஈட்டும் பிரிவுகளைச் சீரமைப்புச் செய்ய உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
101 ஊழியர்கள்
ஷேர்சாட் நிறுவனத்தில் 400க்கும் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், தற்போது 25 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஷேர்சாட் உயர்மட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்து இன்று மாலையில் தான் தெரியும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பளம்
தற்போது வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு 2 மாத garden leave அல்லது 50 சதவீத சம்பளத்தில் 4 மாத வேலை கொடுக்கப்படும் என ஷேர்சாட் தெரிவித்துள்ளது.
garden leave என்பது நிறுவனத்திலிருந்து
வெளியேற்றப்படும் ஊழியர்கள் நிறுவனத்தில் எவ்விதமான வேலையிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் பணியில் இருப்பார்கள்.
முதலீட்டாளர்கள்
பெங்களூரை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஷேர்சாட் நிறுவனத்தில் டிவிட்டர், டிரஸ்ட்பிரிட்ஜ் பார்ட்னர்ஸ், சன்வேய் கேப்பிடல், லைட்ஸ்பீட் வென்சர் பார்னர்ஸ் மற்றும் SAIF கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீங்கள் படிக்க மேலும் சில
12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
நவ கிரஹங்களின் வரலாறு
பழமொழியும் அதன் அர்த்தங்களும்
யோகாசனம்
63 நாயன்மார்கள்
சிவபுராணம் (நிறைவுற்றது)
எண் கணித பலன்கள்
பொன்னியின் செல்வன்
மகாபாரதம் (நிறைவுற்றது)
சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
பல்லி விழும் பலன்கள்
இராமாயணம் (நிறைவுற்றது)
ரிலாக்ஸ் ப்ளீஸ்
விளம்பரம் செய்ய
இந்த வாரம் அதிகம் படித்தவை
09-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, மார்கழி 25 நாள் - கீழ் நோக்கு நாள் பிறை - வளர்பிறை திதி சுக்ல பக்ஷ தசமி - Jan 08 02:26 PM – Jan 0...
பைரவருக்கு எந்த நாளில் என்ன பூஜை செய்தால் சிறப்பு.
ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் ருத்ராபிஷேகம் வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும் கடன் வாங்கி வட்டியும் அசையும...
பணம் எடுத்துட்டாங்க ஆனா போகலயா?- டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் ஒரு முக்கிய சேவையாக மாறிவிட்டது. மக்கள் பர்ஸை எடுப்பதை விட QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்த ...
12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழ...
3 பின் பிளக்கின் முக்கியத்துவம்: எர்த் இணைப்பின் அவசியம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி
எதற்காக 3 பின் பிளக்? வீடுகளில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸ்களில் 3 பின் பிளக்குகள் பெரும்பாலும் காணப்படும். 3 பின் பிளக் என்பது எர்த் இணைப்...
05-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, மார்கழி 21 நாள் - கீழ் நோக்கு நாள் பிறை - வளர்பிறை திதி சுக்ல பக்ஷ சஷ்டி - Jan 04 10:01 PM – Jan ...
யாரும் ஏற முடியாத மரம்... கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
------------------------------------------------- காமெடி கலாட்டா...!! ------------------------------------------------- கணவன் : எத்தனை தடவை ...
ஹொக்கைடோவின் அதிசயம்: பனி, மணல், கடல் சங்கமிக்கும் இடம்!
கடற்கரை என்றாலே மணலும், கடலும்தான் நினைவுக்கு வரும். ஆனால், ஜப்பானின் ஹொக்கைடோவில் ஒரு அதிசயம் நடக்கிறது! பனி, மணல், கடல் மூன்று...
பாண்டி ஆட்டம்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள...
குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான்... அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!
----------------------------------------------------- சிரிக்கலாம் வாங்க...! ----------------------------------------------------- ...
Subscribe via Email It’s Free
*We Hate Spam!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக