Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 24 ஜூன், 2020

மருதாணி வைப்பதால் இத்தனை நன்மைகள் உள்ளதா...?

மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள்,வயிற்று உபாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.

முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
 
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து  தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.
 
மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!