இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் (Line of Actual Control) பகுதியில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, திங்கள்கிழமை (ஜூன் 29) அன்று, டிக்டாக் (TikTok), UC ப்ரவுசர் மற்றும் கேம் ஸ்கேனர் (Cam Scanner) உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொது ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TikTok செயலியை, இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு வார காலத்திற்கு டிக்டாக் பயன்பாடு தடை செய்யப்பட்டபோது, பைட் டான்ஸ் (ByteDance) என்னும் சீன தொழில் நுட்ப நிறுவனம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரு நாளைக்கு, $5,00,000 அதாவது 3.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்து வருவதாக கூறியிருந்தார். ByteDanc நிறுவன தான் டிக் டாக் செயலியை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள டிக் டாக் பயனர்கள், டிக் டாக் செயலியில், 550 கோடி மணிநேரங்களை செலவிட்டனர் என அறிக்கை ஒன்று கூறுகிறது. மற்றொரு அறிக்கை, டிக்டோக்கின் மாதாந்திர பயன்பாட்டின் அடிப்படையில் அதனை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை டிசம்பர் 2019 க்குள் 90 சதவீதம் அதிகரித்து 8.1 கோடியாக அதிகரித்ததாக மற்றொரு அறிக்கை கூறுகிறது. 2019 டிசம்பரில், டிக் டாக்கில் செலவழிக்கப்பட்ட நேரம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள சில செயலிகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான, அதிகமான அலவில் பயன்படுத்தக் கூடிய செயலிகள். குறிப்பாக டிக் டாக். புதிய சமூக ஊடக தளங்களான ஹலோ(Helo) மற்றும் லைக் (Likee), வீடியோ சேட் செயலியான பிகோ லைவ் (Bigo Live) ஆகியவை ஆங்கிலத்தை அதிகம் பயன்படுத்தாத இந்தியர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள செயலிகள் ஆகும். இந்த பயனர்கள் இப்போது இதற்கான மாற்றை தேட வேண்டும்.
மேலும், இந்த சமூக ஊடக் தளங்களில் பெரும்பாலானவை இந்திய படைப்பாளர்களைக் கொண்டுள்ளன. அவர்களில் பலருக்கு இது தான் ஒரே வருமான ஆதாரமாகவும் உள்ளது. இந்த செயலிகளில் பலவற்றுக்கு இந்தியாவில் அலுவலகங்கள் உள்ளன. அதில் பணியாற்றுபவர்கள் வேலையை இழக்கும் வாய்ப்பும் உள்ளது.
ஏப்ரல் மாதம் பால்சன் இன்ஸ்டிடியூட்டின் மேக்ரோபோலோ திங்க் டேங்க் என்றும் அமெரிக்க அராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் 10 செயலிகளில், ஆறு சீன தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தது என்றும் அதனுடன் ஒப்பிடும் போது அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த நான்கு செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், சமூக ஊடகங்களை பயன்பாடில் மிக பெரிய சந்தை வாய்ப்பு நிறைந்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, ஏப்ரல் முதல் இந்தியாவின் ஆப் ஸ்டோர் (App Store )மற்றும் கூகிள் பிளேயில் (Google Play ) அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் 25 செயலிகளில், எட்டு செயலிகள் சீனவை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோக்களை படம்பிடிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் செயலியாக இது உள்ளது.