Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 ஜூன், 2020

தல அஜித்தின் 'வலிமை' ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுமா.? தயாரிப்பாளர் அளித்த விளக்கம்.!

அஜித்தின் வலிமை படம் உட்பட போனி கபூர் தயாரிக்கும் மைதான் மற்றும் வக்கீல் சாப் ஆகிய படங்கள் திரையரங்குகளில் தான் முதலில் வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். 

மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து, அஜித் அவர்கள் பலரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்ற நிலையில் பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். எனவே தல அஜித்தின் வலிமை திரைப்படமும் ஓடிடியில் தான் ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்விக்கு தயாரிப்பாளரான போனி கபூர் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். 

அவர் தயாரிக்கும் வலிமை, மைதான், வக்கீல் சாப் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படமாட்டாது. ஏனெனில் ஒரு சில படங்களை தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியதோடு, தன்னுடைய 40 ஆண்டு தயாரிப்பு அனுபவத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளதாகவும், எனவே எனது மூன்று படங்களும் திரையரங்குகளில் தான் முதலில் வெளியிடப்படும் என்றும், அதன் பின்னரே ஓடிடியில் வெளியாகும் என்று கூறியுள்ளார். 


அது மட்டுமின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்பவர்கள் வேறு வழியின்றி செய்வதாகவும், அவர்களுக்கு எனது ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளார். வலிமை படத்தினை குறித்த எதாவது அறிவிப்பை அறிய ரசிகர்கள் கிடையாய் கிடந்த நிலையில் போனி கபூர் அவர்களின் இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் என்று கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக