கூகிளில் போலி செய்தி மற்றும் போலி தகவல்கள்
சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் போலி செய்திகளைப் போலி செய்தியாளர்கள் மற்றும் தகவலைச் சரிபார்க்காத மக்கள் என அனைவரும் கண்மூடித்தனமாகத் தகவல்களை ஷேர் செய்து வருகின்றனர். இது போன்ற போலியான தகவல்களால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், சில நேரங்களில் போலியான செய்திகளால் அசம்பாவிதங்களும் நிகழ்கிறது. இதனைத் தடுக்க கூகிள் பதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
புதிய Fact check லேபிள்கள்
இந்நிலையில் முதற்கட்டமாகக் கூகுள் நிறுவனம் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுவதைத் தடுக்கும் வகையில் Fact check என்ற புதிய லேபிலிங்க் அம்சத்தைக் கூகிள் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. அதன் கூகிள் சர்ச் தளத்தில் இனி தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படை வலைப் பக்கங்களுடன் இந்த புதிய லேபிள்கள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருக்களில் சுறா மீன்கள்
உதாரணத்திற்கு 2017ம் ஆண்டு ஹூஸ்டன் தெருக்களில் சூறாவளிக்குப் பிறகு சுறாக்கள் நீந்திக் கொண்டிருப்பதைப் போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த புகைப்படங்களை வைத்து fact check அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது எனக் கூகுள் விளக்கியுள்ளது. போலியான செய்திகள் தொடர்பான வார்த்தைகளைப் பயனர் பயன்படுத்தும்போதும் கூகிள் அதைக் கணித்து தகவல்களைக் காண்பிக்கும் பொழுது Fact check லேபிளுடன் காண்பிக்கிறது.
உண்மையானதா அல்ல பொய்யானதா?
கூகிள் இமேஜில் sharks are swimming in Houston streets என்று நீங்கள் சர்ச் செய்தால், உங்களுக்குக் காண்பிக்கப்படும் புகைப்படத்திற்கு மேலே fact check என்ற லேபிள் காண்பிக்கப்படுகிறது. இந்த fact check லேபிளை நீங்கள் கிளிக் செய்தால் அந்த செய்தி உண்மையானதா அல்ல பொய்யானதாக என்பதைத் தெளிவாக உங்களுக்கு விலகிவிடும் படி கூகிள் புதிய அம்சத்தை விரிவாகவும் தெளிவாகவும் உருவாகியுள்ளது.
கூகிளின் அதிரடி முடிவு
கூகிளின் இந்த அதிரடி முடிவு போலி செய்திகளுக்கும் போலி தகவல்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Fact check லேபிள்கள் மூலம் குறிப்பிட்ட தகவல்களின் பின்னணியில் உள்ள உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள உதவும். அதேபோல், இந்த அம்சம் உங்களின் சர்ச் தரவரிசைகளைப் பாதிக்காது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக