Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 1 ஜூலை, 2020

ஒரே குழியில் 12 சடலங்கள்! கர்நாடகாவில் நடைபெற்ற விபரீதம்!

12 உடல்களை ஒரே குழியில் அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் 5,83,272 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 17,359 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர். 

இவர்களின் உடல்களை ஒரே குழியில் அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து  சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு உரிய விசாரணை நடத்தப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!