Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 செப்டம்பர், 2020

ரூ.10,300 மட்டுமே: களமிறங்கிய நோக்கியா ஸ்மார்ட்போன்., டிரிபிள் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி!

 எச்எம்டி குளோபல் நோக்கியா

மூன்று பின்புற கேமராக்களுடன் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

எச்எம்டி குளோபல் நோக்கியா

எச்எம்டி குளோபல் பிராண்ட் உரிமம் நோக்கியாவின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 வெளியிட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே எச்டி+ டிஸ்ப்ளேக்கள், பின்புற கைரேகை சென்சார்கள் ஆகியவைகளை கொண்டுள்ளன.

மூன்று பின்புற கேமராக்கள்

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள், பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வருகிறது. மேலும் இந்நத ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் ஆக்டோ கோர் சிபியூ-ஹெச்எம்டி சிபியு அம்சம் உள்ளது. இது நோக்கியா 3.2 குவாட் கோட் ப்ராஸசரை விட 70 சதவீதம் வேகமானது.

ஆண்ட்ராய்டு 10 வடிவமைப்பு

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 வடிவமைப்போடு வருகிறது அதோடு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டுக்கு தயாரான முறையில் இது வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

பஞ்ச் ஹோல் செல்பி கேமரா

நோக்கியா 3.4 6.39 இன்ச் எல்சிடி பஞ்ச் ஹோல் செல்பி கேமரா டிஸ்ப்ளே, 720 பிக்சல் ரெசல்யூஷன் (19.5:9) மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னெஸ் வசதி உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதியும் உள்ளது.

13 மெகாபிக்சல் பிரதான கேமரா

கேமரா வடிவமைப்பு குறித்து பார்க்கையில், 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 எம்பி அல்ட்ராவொய்ட் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் என மூன்று கேமராக்கள் உள்ளது. செல்பி கேமரா 8 மெகாபிக்சல் ஆகும்.

4000 எம்ஏஹெச் பேட்டரி

டைப்சி போர்ட், 5வாட்ஸ் சார்ஜர், 4000 எம்ஏஹெச் பேட்டரி அம்சம் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவு உள்ளது. இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.13,700 ஆக கூறப்படுகிறது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மமார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 720 ப்ளஸ் ரெசல்யூஷன், 4500 எம்ஏஹெச் பேட்டரி அம்சம் இதில் உள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 சோசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,300 ஆக கூறப்படுகிறது.

32 ஜிபி மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு என இரண்டு விருப்பங்களில் வருகிறது, இவை இரண்டும் 512 ஜிபி வரை விரிவாக்கக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக