இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பல்வேறு நிறுவனம் தனித்துவமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹெட்போன் உள்ளிட்ட பல ஆடியோ சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அதன்படி இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற
நிறுவனமான ஹைஃபைமேன் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம்
செய்துள்ளது. இந்த புதிய ஹெட்போன் மாடல் BW200 எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த புதிய ஹைஃபைமேன் BW200 ஹெட்போனில் மேக்னெடிக் இயர்பட், ப்ளூடூத் 4.1, க்விக் சார்ஜ் வசதி, ஐபிஎக்ஸ்4 சான்று மற்றும் பல்வேறு சிறப்பாக வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் இந்த புதிய சாதனம் குறைந்த எடை கொண்டிருக்கும் BW200 ஹெட்செட் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.இதில் உள்ள இன்-லைன் கண்ட்ரோல், பில்ட் இன் மைக்ரோபோன்வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் 4.1 மூலம் சீரான ஆடியோ அனுபவம் பெற முடியும்.
குறிப்பாக இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் க்விக் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
பின்பு BW200 ஒரு முனையில் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனுடன் ஒரு இன்-லைன் கட்டுப்பாட்டு தொகுதி மற்றும் மறுபுறம் ஒரு பேட்டரி பெட்டியை சரியான எடை சமநிலையை பராமரிக்க கொண்டுள்ளது. ஹெட்போன் HSP / HFP / A2DP / AVRCP புளூடூத் சுயவிவரங்களை உள்ளடக்கியது, பயனர்கள் மூன்று பொத்தான்கள் வழியாக இசையை எளிதாக கட்டுப்படுத்த அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு முறையும் ஹெட்போன் முன்பு இணைக்கப்பட்ட சாதனத்தின் வரம்பிற்குள் இருக்கும்போது உடனடி "அங்கீகாரத்திற்காக" பல்வேறு ஆதாரங்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது.
இந்தியாவில் ஹைஃபைமேன் BW200 நெக் ப்ளூடூத் ஹெட்போன் ஆனது கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இதன் விலை ரூ.1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிளிப்கார்ட், அமேசான், ஹெட்சோன், போன்ற வலைதளங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக