Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 செப்டம்பர், 2020

வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..!

கணிப்புகள் பொய்யானது

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வந்த பின்பு இந்தியா டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் வந்தது உண்மை தான், ஆனால் இந்தக் கடுமையான வர்த்தகப் போட்டியின் இறுதியில் ஜியோ - ஏர்டெல் என இருமுனை போட்டியாகத் தான் இருக்கும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கும் நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமே காலியாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் பங்கு மதிப்பு கடந்த சில வாரங்களாக வீழ்ச்சி அடைந்து வரும் இதே வேளையில் வோடபோன் ஐடியா நிறுவனம் சாவின் விளிம்பில் இருந்து மீண்டு சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது, ஆனால் ஏர்டெல்..?

உண்மையில் பார்தி ஏர்டெல் நிலை என்ன..? ஏர்டெல் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்குச் சுனில் மிட்டல் என்ன திட்டம் வைத்துள்ளார்?

கணிப்புகள் பொய்யானது

ஏர்டெல் குறித்து முதலீட்டாளர்கள் 3 முக்கிய கணிப்புகளை வைத்திருந்தனர்.

1. வோடபோன் ஐடியா நிறுவனம் போட்டி மற்றும் நிதி நெருக்கடி தாக்க முடியாமல் வர்த்தகத்தை விட்டு வெளியேறும், இதனால் பெரும் பகுதி வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நோக்கி வருவார்கள்.

2. இந்தியாவில் இன்னும் 30 கோடிக்கும் அதிகமான 2ஜி சேவையைப் பயன்படுத்துவோர் உள்ளனர். இவர்களின் 4ஜி சேவைக்கு மாறும் போது ஏர்டெல் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெறும்.

3. ஜியோ பெரிய அளவிலான டெலிகாம் வர்த்தகத்தை மிகவும் குறைந்த காலகட்டத்தில் கைப்பற்றினாலும் fixed line broadband சேவையில் ஏர்டெல் மிகவும் வலிமையாக உள்ளது, ஆனால் ஜியோ இப்பிரிவில் இன்னும் நுழையவில்லை.

இந்த 3ம் என்ன ஆனது...?

ஏர்டெல் குறித்து வைத்திருந்த 3 கணிப்புகளும் பொய்யானது என்பது தான் தற்போதைய உண்மை. இதை நிருப்பிக்கும் வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஏர்டெல் பங்கு மதிப்பு 14 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் வோடபோன் ஐடியா பங்குகள் எப்போதும் இல்லாத வகையில் இதே காலகட்டத்தில் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களும், டெலிகாம் வல்லுனர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

ஏர்டெல் வீழ்ச்சி

ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வரும் ஏர்டெல் பங்கு விலை, டெலிகாம் சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல் நிறுவனம் தனது டெலிகாம் சேவை கட்டணத்தை உயர்த்தியது. இது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

AGR கட்டண தீர்ப்பு

இதன் எதிரொலியாக AGR கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தும் முறை குறித்துத் தீர்ப்பு வந்த பின்பும் ஏர்டெல் பங்கு விலை உயராமல் தொடர் வீழ்ச்சி பாதையில் உள்ளது. ஜூலை மாத உச்ச விலையில் இருந்து இதுவரை 20 சதவீதம் ஏர்டெல் பங்கு மதிப்பு சரிந்துள்ளது, இதில் செப்டம்பர் மாதம் மட்டும் 8 சதவீதம் வீழ்ச்சி.

வோடபோன் ஐடியா

போட்டியைத் தாங்க முடியாமல் வோடபோன் ஐடியா வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவனம் AGR தீர்ப்புக்குப் பின் நிறுவனத்தின் VI என Rebranding செய்து புதிய வாடிக்கையாளர்களை அடைய முயற்சி செய்வது மட்டும் அல்லாமல் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக அமேசான், வெரிசோன் கூட்டணியில் 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தப் புதிய முதலீடு முயற்சிகள் வோடபோன் ஐடியா நிறுவனத்தை அடுத்த 2 வருடத்திற்கு இயங்க போதுமான நிதியைப் பெற வழிவகைச் செய்யும்.

2ஜி வாடிக்கையாளர்கள்

சமீபத்தில் டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏர்டெல் நிறுவனத்தின் 31.8 கோடி வாடிக்கையாளர்களில் 55 சதவீதம் பேர் இன்னும் 2ஜி சேவையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

லாபம் மற்றும் நஷ்டம்

2ஜி வாடிக்கையாளர்களால் ஏர்டெல் நிறுவனத்திற்கு லாபமும் உண்டு, நஷ்டமும் உண்டு. ஆம் 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி வாடிக்கையாளர்களாக மாற்றி ஏர்டெல் தனது ARPU வருமானத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.

ஆனால் ஜியோ கூகிள் முதலீட்டுக்குப் பின் வெறும் 4000 ரூபாயில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. இது ஏர்டெல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆபத்து.

பிராட்பேண்ட்

ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த வருடம் ஐியோ அறிவித்த அதிவேக ஜியோ பைபர் பிராண்ட்பேன்ட் சேவையைத் தற்போது மிகவும் மலிவான கட்டணத்தில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளது ஜியோ. இதுவும் ஜியோவின் பிராட்பேண்ட் சேவை வர்த்தகத்திற்கு ஆபத்தாக உள்ளது.

வேகம் போதாது சுனில்

சில மாதங்கள் முன்பு வரையில் எதெல்லாம் ஏர்டெல்-க்குச் சாதகமாக இருக்கிறது எனக் கூறப்பட்டதோ, தற்போது அனைத்தும் பாதகமாக மாறி வருகிறது. ஜியோ-வின் வேகத்திற்கு ஏர்டெல் நிறுவனத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ மிகவும் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய டெலிகாம் சாம்ராஜ்ஜியத்தை அமைத்துள்ள நிலையில், ஏர்டெல் தனது கோட்டை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக