Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு ஈசியாக கடன் பெறுவது எப்படி?

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு தொழிலுக்கு எளிமையாக கடன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு தொழில் கடந்த பல ஆண்டுகளாக படிப்படியாக நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. 20ஆம் கால்நடை வளர்ப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, நாட்டின் கால்நடை வளர்ப்பு தொழில் சீராக வளர்ந்து வருவது தெரிகிறது.

இதன் அடிப்படையில் கால்நடை வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.



பசு கிசான் கிரெடிட் கார்டு

 

கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு பசு கிசான் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கடன் மட்டுமல்லாமல், தொழில் மூலதனத்துக்கு தேவையான நிதியுதவியை வழங்கவும் ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களுக்கு இது பொருந்தும்.

 

எவ்வளவு கடன் கிடைக்கும்?

 

இத்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு தொழில் செய்வோருக்கு ஒரு பசுவிற்கு ரூ.40,783 தொகையும், ஒரு எருமைக்கு ரூ.60,249 தொகையும் கடனாக வழங்கப்படுகிறது.

 

சிறப்பம்சம்

 

பசு கிசான் கிரெடிட் கார்டு முலம், கால்நடை வளர்ப்பு தொழில் செய்வோருக்கும், செய்ய விரும்புவோருக்கும் உத்தரவாதம் இல்லா கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

 

யாருக்கெல்லாம் பயன்?

 

கால்நடை வளர்ப்பில் வேறு எந்தத் திட்டங்களையும் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பயன் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் கால்நடைக்கு காப்பீடும் வழங்கப்படுகிறது. ஆக, கால்நடை இறக்க நேர்ந்தால், விவசாயிக்கு நிதியிழப்பு ஏற்படாது.

 

தேவையான ஆவணங்கள்

 

பசு கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு பாஸ் புக் ஆகிய ஆவணங்கள் தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக