Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

சத்து மிகுந்த ராகியை குழந்தைக்கு இப்படி கொடுத்தா மறுக்காம குடிப்பாங்க, எல்லோருக்கும் நல்லது!

ragi powder for babies: சத்து மிகுந்த ராகியை குழந்தைக்கு இப்படி கொடுத்தா  மறுக்காம குடிப்பாங்க, எல்லோருக்கும் நல்லது! - how to prepare ragi nuts  powder for babies | Samayam ...குழந்தைக்கு 7 மாதத்துக்கு பிறகு உணவு பொருள்கள் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். ஆனால் அப்படி சேர்க்கும் பொருள்கள் அனைத்தும் பக்குவமாக சத்து குறையாமல் சேர்க்க வேண்டும். குழந்தைகளும் மறுக்காமல் குடிக்க வேண்டும். சத்துமிகுந்த கேழ்வரகை குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்பதை பார்க்கலாம்.

 சத்து மிகுந்த ராகியை குழந்தைக்கு இப்படி கொடுத்தா மறுக்காம குடிப்பாங்க, எல்லோருக்கும் நல்லது!


குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு இணையான இணை உணவை தொடங்கும் போது திரவ வகை உணவை தான் முதலில் சேர்ப்போம். திட உணவையும் அதிக மென்மையாக்கி கொடுப்பதுதான் வழக்கம். பெரும்பாலும் குழந்தைக்கு கஞ்சி அல்லது கூழ் வகையறாக்களைத்தான் அதிகம் கொடுப்பது வழக்கம். அப்படி கொடுக்கும் கஞ்சி வகைகளில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டால் வளர்ந்த பிறகும் அதை மறுக்கமாட்டார்கள்.

கேழ்வரகை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் இந்த ராகி பவுடரின் சுவை குழந்தைகளோடு பெரியவர்களுக்கும் பிடிக்கும். அதுமட்டும் அல்லாமல் சத்து நிறைந்த இதை வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் தயக்கமின்றி கொடுக்கலாம். எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


தேவை:

 
கேழ்வரகு - 1 கப்,
கசகசா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2 ( வாசனைக்கேற்ப)
ஜவ்வரிசி, பச்சை அரிசி - தலா 1 டீஸ்பூன்,
உலர் பருப்புகள் - தலா 10,
கொகோ பவுடர்- 2 டீஸ்பூன்
பால் பவுடர்- 2 டீஸ்பூன்
கல் உப்பு - 2 கல்

கேழ்வரகை சுத்தம் செய்து மண், கல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். ராகியை தண்ணீரில் அலசினால் அதன் மேல் இருக்கும் தோல் வந்துவிடும். பிறகு ராகி மூழ்கும் அளவு ஊறவைத்து 10 மணி நேரம் கழித்து அந்த நீரை வடித்து வைக்கவும்.


சுத்தமான வெள்ளைத்துணியில் வடிகட்டிய ராகியை வெள்ளைதுணியில் போட்டு இலேசாக இறுக்கமாக கட்டி விடவும். அவை உலராமல் இருக்க தினமும் ஒருமுறை அதன் மீது தண்ணீர் தெளித்துவிடவும். 3 நாட்களில் முளை கட்டி இருக்கும். முளைகட்டியை கேழ்வரகை அகலமான தட்டில் கொட்டி அதன் ஈரம் போக காயவிடுங்கள். நன்றாக காய்ந்ததும் பவுடர் தயாரிக்கலாம்.

முளைகட்டிய ராகியை வாணலியில் சேர்த்து வறுக்கவும். அதன் வாசனை போகும் வரை வறுத்து சூடு ஆற தட்டில் கொட்டவும். இதே போன்று உலர் பருப்புகள், கசகசா, ஜவ்வரிசி, அரிசி, ஏலக்காய் என்று அனைத்தையும் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். அரிசியும், ஜவ்வரிசியும் பொரிய வேண்டும். அனைத்தையும் ஒன்றாக கொட்டி ஆறவிடவும்.

மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு கட்டியில்லாமல் அரைக்கவும். ஈரப்பதமாக இருந்தாலும் கட்டி கட்டியாக இருக்கும். கட்டியில்லாமல் அரைத்து அகலமான தட்டில் கொட்டி அதில் கொகோபவுடர், பால் பவுடர் இரண்டையும் கலந்து கொள்ளவும்.இனிப்பு தேவையென்றால் சர்க்கரை, நாட்டுசர்க்கரை என ஒன்றை கலந்துகொள்ளலாம். எல்லாம் நன்றாக கலந்ததும் அதை கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.


இந்த பவுடரை ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பதால் அவ்வபோது தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைக்கு கொடுக்கும் போது வெந்ந்ரீலும் கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வேளை கொடுத்தாலே போதுமானது. ஒரு வயதுக்கு பிறகு பாலில் ஒரு டீஸ்பூன் பவுடர் கலந்து கொடுக்கலாம். தயாரிக்கும் போது இனிப்பு சேர்க்காவிட்டால் பவ்டர் கலக்கும் போது தேவைக்கேற்ப சர்க்கரையோ நாட்டு சர்க்கரையோ சேர்க்கலாம். பயணங்களின் போதும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்து நிறைந்த பவுடர் இது.

கேழ்வரகு மற்ற தானியங்களை காட்டிலும் அதிக கால்சியமும், பாஸ்பரஸும் கொண்டிருக்கிறது. ரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்க உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுப்பதன் மூலம் அவர்களது எலும்புகள் உறூதியாகிறது. அரிசியை காட்டிலும் கேழ்வரகின் ஊட்டச்சத்துகள் அப்படியே உள்ளது.

நார்ச்சத்து மிகுந்தது. உடலில் நல்ல கொழுப்புகள் அளவை அதிகரிப்பதால் இது வளரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூட நல்லது. இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் என அத்தனை சத்துகளும் இருப்பதால் தான் இது ஆறுமாத காலத்துக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்தான பானமாக இது சொல்லப்படுகிறது. குழந்தைக்கு செரிமானம் எளிதாக இருப்பதால் கேழ்வரகை தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகு பால் கொடுக்கும் முறை குறித்து ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். தற்போது இந்த பவுடர் செய்முறையிலும் உங்கள் குழந்தையின் சத்து மேம்படவே செய்யும். இது அம்மாக்களுக்குமானது. வளரும் பிள்ளைகள், வயதானவர்கள் என அனைவருக்குமே கொடுக்கலாம்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக