இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது என்பதே மிகவும் அரிதான ஒரு விஷயமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆய்வின்படி 2021ம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 760 மில்லியனை தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1000 விலைக்குள் கிடைக்கும் 10 சிறந்த ஸ்மார்ட் கேட்ஜெட்கள்
அதேபோல், ஸ்மார்ட் கேட்ஜெட்களின் பயன்பாடும் இந்திய சந்தையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நவீன காலத்திற்கு ஏற்றார் போல பல வித்யாசமான ஸ்மார்ட் கேட்ஜெட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. பயனர்களின் தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் இந்த கேட்ஜெட்களில் மலிவு விலை கேட்ஜெட்களுக்கு இங்கு மவுசு அதிகமாகவுள்ளது. அப்படி, ரூ. 1000 விலைக்குள் கிடைக்கும் 10 சிறந்த ஸ்மார்ட் கேட்ஜெட்களை உங்களுக்காக பட்டியலிட்டுளோம்.
1. ஸ்பிரே அண்ட் கிளீன் டிவைஸ் (spray n' clean device)
இந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம், உங்கள் ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது உங்களுக்கான சிறந்த ஆரோக்கியம்.
இதன் விலை வெறும் ரூ. 400 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் :Amazon
2. வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜ்ர் (wireless fast charger)
சமீபத்திய தொழில்நுட்பத்தை இப்படி நம்பமுடியாத குறைந்த விலையில் இந்த நிறுவனம் வழங்கியுள்ளது ஆச்சரியத்திற்குரியது. வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தை கம்மி விலையில் பாஸ்ட் சார்ஜிங் உடன் அனுபவிக்க விரும்புவோருக்கு இந்த கேட்ஜெட் ஒரு அற்புதமான சாய்ஸ்.
இதன் விலை வெறும் ரூ. 999 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon
3. யூனிவர்சல் ட்ரைபாட் ஸ்டாண்டு(Universal tripod stand)
புகைப்படம் மற்றும் வீடியோ படம் எடுக்க ஆர்வம் இருக்கும் பயனர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய கேட்ஜெட் இந்த யூனிவர்சல் ட்ரைபாட் ஸ்டாண்டு. இதில் DSLR கேமரா, GoPro கேமரா மற்றும் ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன் விலை வெறும் ரூ. 499 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon
4. டூயல் போர்ட் பாஸ்ட் சார்ஜ்ஜர் (Dual-port fast charger)
ஒரே நேரத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்ய இந்த டூயல் போர்ட் பாஸ்ட் சார்ஜ்ஜர் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேட்ஜெட் உடன் 3 அடி நீளம் உடைய பாஸ்ட் சார்ஜிங் கேபிளும் இலவசமாக கிடைக்கிறது.
இதன் விலை வெறும் ரூ. 360மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் :Amazon
5. லென்ஸ் வைப்ஸ் (Lens wipes)
வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். குறிப்பாக கண்ணாடி அணியும் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் பயனர்களுக்கு இது பெரிதும் பயன்படும். ஸ்மார்ட்போன் திரைகளையும் கேமரா லென்ஸ்களையும் சுத்தம் செய்ய ஒரு பாதுகாப்பான கேட்ஜெட் இது.
இதன் விலை வெறும் ரூ. 248 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon
6. ஓடிஜி கார்டு ரீடர் (OTG Card Reader)
உங்கள் ஸ்மார்ட்பஹோனே என்ன மாடலாக இருந்தாலும் இந்த கேட்ஜெட் கச்சிதமாக வேலை செய்யும். ஒரே ஒரு கேட்ஜெட்டை வைத்து நீங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் உங்கள் பென்டிரைவ்களை இனி இணைத்துக்கொள்ளலாம். இதில் Lightning + Type C + Micro USB + USB போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் விலை வெறும் ரூ. 999 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon
7. டச் பிரண்ட்லி வாட்டர்ப்ரூஃப் பேக்ஸ் (Touch-Friendly waterproof bags)
மழைக்காலத்தில் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு கட்டாய கேட்ஜெட்ஸ் சாதனம் இதுவாகும். நீர் புகாத இந்த பாக்கெட்டை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். டச் பயன்பாட்டுடன் வருவதால் மொபைலை பக்குள் வைத்து நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
இதன் விலை வெறும் ரூ. 499 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon
8. பாப் சாக்கெட் (Pop Socket)
ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஸ்டாண்ட் மற்றும் கிரிப்பர் சாதனம் இதுவாகும். ஸ்மார்ட்போன்களை தவறவிடாமல் பாதுகாப்பாக உங்கள் கரங்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.
இதன் விலை வெறும் ரூ. 695 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon
9. வாட்டர் ப்ரூஃப் ஆரம் பேண்ட் பௌச் (Waterproof Armband pouch)
ஃபிட்னஸ் பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள கேட்ஜெட்டாகும், குறிப்பாக தினமும் ஜிம் செல்பவர்களுக்கு பயனுள்ள சாதனம்.
இதன் விலை வெறும் ரூ. 285 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon
10. அட்ஹெஸிவ் கேபிள் கிளிப்ஸ் (Adhesive cable clips)
சுவற்றில் ஆணி அடிக்காமல் உங்கள் சார்ஜ்ர் கேபிளை எளிதாக கட்டிலில், அல்லது சுவற்றில் ஒட்டிக்கொள்ள இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
இதன் விலை வெறும் ரூ. 249 மட்டுமே
வாங்க கிடைக்கும் இடம் : Amazon

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக