Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 செப்டம்பர், 2020

அப்பாவை அடிக்காதே என சொன்ன தம்பி…. கோபத்தில் அண்ணன் செய்த கொலை!

தம்பி தினேஷ்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்ற கட்டிடத் தொழிலாளி தன் தம்பியையே சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

ஈரோடு கமலா நகரைச் சேர்ந்தவ கட்டிடத் தொழிலாளி மனோகரன். இவருக்கு சங்கர் (30), தினேஷ் (20) என 2 மகன்கள் உள்ளனர்.
சங்கருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். சங்கரின் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி அவர் மனைவியோடு சண்டை போடுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் சங்கரின் குடிப்பழக்கம் அதிகமாக இரு சக்கரவாகனத்தில் இருந்து விழுந்து அடிபட்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். காயங்களைப் பார்த்த சங்கரின் தந்தை அவரைத் தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சங்கரின் தம்பி தினேஷ் சங்கரை தாக்கி வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

இதையடுத்து மறுநாள் கோபத்தோடு வீட்டுக்கு வந்த சங்கர் தினேஷ் தனியாக தூங்குவதைப் பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தினேஷ் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இது சம்மந்தமாக சங்கரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலிஸார் சங்கரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக