Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 17 செப்டம்பர், 2020

இதை விட சிறந்த மருந்து உலகில் எதுவுமே இல்லை.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------
அப்பா : டேய் Exam-ல பாஸ் பண்ணீட்டியா டா?
மகன் : இல்லப்பா 4 பாடத்துல Fail...
அப்பா : இனிமே என்னை நீ அப்பான்னு கூப்பிடாத...
மகன் : சரி டா மச்சி...
அப்பா : 😡😡
-------------------------------------
கார்த்தி : டேய்... தேங்காயா திருடுற?... இருடா உன் அப்பாக்கிட்டயே சொல்றேன்...
குமார் : பக்கத்து மரத்துல தான் என் அப்பா இருக்காரு... சொல்லுங்க...
கார்த்தி : 😳😳
-------------------------------------
ஆறுதல்...!!

-------------------------------------

கவலையில் இருப்பவர்களிடம் அருகில் அமர்ந்து பேசுங்கள். முடிந்தவரை அவருக்குத் துணையாக இருங்கள். ஆறுதல் சொல்வதை விட ஆறுதலாக இருப்பதுதான் மிகச் சிறந்தது. நான் இருக்கிறேன் உனக்கு என்று அவருக்கு உணர்த்துங்கள். அதிலேயே பாதி துயரம் பறந்தோடி விடும்.

வார்த்தைகளை விட நல்ல ஆறுதல் தரும் மருந்து உலகில் எதுவுமே இல்லை. உங்களுக்கு பிரியமானவர்களுக்கு கஷ்டம் என்றால் அது உங்களுக்கும் கஷ்டம்தான். இப்படிப்பட்ட நேரத்தில் அவருடன் அனுசரணையாக நாலு வார்த்தை பேசுங்கள். அந்த ஆறுதல் வார்த்தைகள் அவரது மனதிற்கு மருந்தாக அமையும்.

-------------------------------------
முயற்சி...!!

-------------------------------------

முயற்சி செய்து தோற்பவனுக்கு
தோல்வி என்பது ஒரு பாடம்தான்...

முயற்சி செய்யாதவனுக்கு
வெற்றி என்பது என்றுமே கனவுதான்...
-------------------------------------

அட அப்படியா?

-------------------------------------

உலகிலேயே மிக எளிமையானது
பிறர் குறை காண்பது...

உலகிலேயே மிக கடினமானது
தன் குறையை உணர்வது...

-------------------------------------
இப்படி இருங்கள்...!!

-------------------------------------
🌟 உங்கள் திறமையை நம்புங்கள்...

🌟 எழுதுங்கள்... எழுத்து உங்களை செம்மைப்படுத்தும்...

🌟 சோம்பேறியாக இருக்காதீர்கள்...

🌟 யாரையும் குறை சொல்லாதீர்கள்...

🌟 எதிரிகளுக்கு பயந்து பின் வாங்காதீர்கள்...

🌟 யாரும் உங்களுக்காக நிற்காவிட்டாலும், மற்றவர்களுக்காக நீங்கள் நிற்கலாம்...

🌟 உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக